Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, August 28, 2013

ரயில் எஞ்சினை உடலில் கட்டி இழுத்து சாதனை படைத்த மனிதர்கள்

லத்வியாவைச் சேர்ந்த இருவர், 254 தொன் எடையுள்ள ரயில் என்ஜினை தமது உடலில் கட்டி இழுத்துச் சாதனை படைத்துள்ளனர்.  ஐரோப்பாவின் மிகப் பல சாலி மனிதர்கள் என்ற சாதனையை படைப்பதற்காக, லத்வியாவின் ரிகா சிட்டி நகரில் கடந்த ஞாயிறன்று இவர்கள் ரயில் என்ஜினை இழுத்தனர்.  1972 ஆம் ஆண்டு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் என்ஜின் 120 கார்களுக்கு அல்லது 50 யானைகளின் எடைக்குச் சமமானதாகும். இவர்கள் ஏற்கெனவே லத்வியாவின் அதி பலசாலி மனிதர்கள் என்ற சாதனையாளராக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.   இச்சாதனை நிகழ்வையொட்டி அன்றைய தினம் முழுவதும் லத்விய ரயில் வரலாற்று நூதனசாலையில் விசேட கண்காட்சிகளும் இடம்பெற்றன.
human body dragging in the train engine


Train Left1

No comments:

Post a Comment