கட்சி
பிரதி நிதிகளுடன் இடம் பெற்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் தேர்தல் ஆணையகத்தில் இடம்
பெற்ற போது,சக்தி தொலைக்காட்சியில் மின்னல் என்னும் விவாத நிகழ்ச்சியினை தொடராக நடத்துவது
தொடர்பில் இந்த நிறுவனத்தினால் தேர்தல் ஆணையாளரின் அனுமதியினை கோறி அனுப்பப்பட்டிருந்த
கடிதம் தொடர்பாக தேர்தல் ஆணயைாளர் மஹிந்த தேசப்பிரிய கட்சிப் பிரதி நிதிகளின் கவனத்திற்கு
கொண்டுவந்தார்.
இந்த
கூட்டத்தில் கலந்து கொண்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்.இந்த
மின்னல் நிகழ்ச்சி தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் காணப்படுவதாகவும்,இதற்கு அனுமதி
வழங்குவதாயின் சில நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என வலியுறுத்தினார்.
இதனை
கேட்டுக் ஆணையாளர் இந்த நிகழ்ச்சியினை கண்காணிக்கும் பொறுப்பமை பிரதி தேர்தல் ஆணையாளர்
முஹம்மத் அவர்களிடம் பாரப்படுத்தியதுடன்,இந்த நிகழ்ச்சியானது தனிப்பட்டவர்களை மற்றும்
இலக்குவைத்து நடத்தப்படுமெனில் அது குறித்து தீர்மாணம் எடுக்க நேரிடும் என்பதை தெரிவித்து
நிபந்தணைகளின் அடிப்படையில் இதனை நடத்துவதற்கான அனுமதியினை தேர்தல் ஆணையாளர் வழங்கியதாக
வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
கடந்த
கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது மின்னல் நிகழ்ச்சியினை போக்கு குறித்து தேர்தல் ஆணையாளரின்
கவனத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் கொண்டுவந்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment