-
பாலாவி - கல்பிட்டி வீதியில் இடம் பெற்ற விபத்தொன்றில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த இரு சகோதரர்கள் ஸ்தலத்தில் பலியான சம்பவம் ஒன்று இன்று
ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு மரணமானவர்கள் முஹம்மத் நிசார் முஹம்மத் ரம்சான்(வயது 13),முஹம்மத்
நிசார் முஹம்மத் ரைசான் (வயது-14) என புத்தளம் பொலீஸார் தெரிவித்தனர்.
பாலாவி கரம்பை சபா-மர்வா நலன்புரி முகாமிலிருந்து கரம்பை பிரதான வீதிக்கருகில்
அமைந்திருந்த மீனவ வாடியில் மீன்வாங்குவதற்காக இரு சகோதரர்களும் துவிச்சக்கர
வண்டியில் சென்றுள்ளனர்.மீன் வாங்குவதற்கு கடையில் நின்ற போது கல்பிட்டி
பகுதியில் இருந்து பாலாவி நோக்கி வந்து கொண்டிருந்த வேண் இவர்கள் மீது மோதி
அருகிலிருந்த மின்கம்பத்துடன் மோதி கடும் சேதத்துக்குள்ளானது.
வாகனம் மோதியில்
இரு சகோதரர்களும் ஸ்தலத்தில் பலியானதுடன்,வாகனத்தில்
பயணி்த்தவர்களில் 5 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்தாக புத்தளம் பொலீஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment