கட்டுரை
எழுதுவது - அபூ அஸ்ஜத் -
பொறுமையுடன் கூடிய இறைவனுக்கு முழுமையாக
கட்டப்பட்டு புனித நோன்பை நோற்று பிரார்த்தணைகளிலும்,வணக்க வழிபாடுகளிலும் ஈடுபடும்
சிற்நத மாதத்தில் இருக்கும் இலங்கை முஸ்லிம்களை அதனது பலன்களை அனுபவிக்க விடாது,அவர்களை
வம்புக்கு இழுக்கும் ஒன்றாகத்தான் இந்த மஹியங்கனை பள்ளிவாசல் மீதான வன்முறைச் சம்பவங்களை
காணமுடிகின்றது.
முஸ்லிம்களின் பலம் அவர்களது இறை வணக்கத்தில்
இருக்கின்றது என்பதை அறிந்து கொண்ட இஸ்லாத்துக்கும்,முஸ்லிம்களுக்கும் எதிரானவர்கள்
அதனை சீர்குலைத்து முஸ்லிம்களின் வேதனைகளையும்,இறைவனின் சாபத்தையும் பெற்றுக் கொள்ளும்
படு பயங்கரமான நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.யா அல்லாஹ் நீ யாருக்கு நேர்வழியினை கொடுக்க
விரும்புகின்றாயோ அவர்களுக்கு அதனை கொடுத்து விடு” என்ற பிரார்த்தனையினை ஒவ்வொரு
முஸ்லிம்மும் இறைஞ்ச வேண்டியது தான் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாகும்.எந்த ஒரு செயற்பாடும்
இறைவனின் நாட்டமின்றி இடம் பெறுவதில்லையென்பதை ஆழமாக விசுவாசம் கொண்டுள்ள ஈமானிய உள்ளத்தில்
இது ஒலிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் தொடராக முஸ்லிம்களுக்கு
எதிராகவும்,தற்போதும் தொடர்ந்த வண்ணமுள்ள இறை இல்லங்களான மஸ்ஜிதுகள் மீது மேற்கொள்ளப்படும்
அசிங்கமான அங்கீகரிக்க முடியாத தாக்குதல்களும்,செயற்பாடுகளும் முஸ்லிம்களால் மட்டுமல்ல,தமிழ்,சிங்கள
சகோதர சமூகமாக மக்களினாலும் வண்மையாக கண்டிக்கப்பட்டுவருகின்றமையினை காணமுடிகின்றது.இவர்களது
உள்நோக்கத்தை அல்லாஹ் மட்டுமே அறிவான்,ஆனால் வெளிப்படையான நோக்கத்தினை பொருத்த வரை
முஸ்லிம்கள் மீது அவர்கள் கொண்டுள்ள மதிப்பின் வெளிப்பாடு என்பதை பரிந்து கொள்ளமுடிகின்றது.இது
வரவேற்புக்குரியதொன்று.மஹியங்கனை பள்ளி வாசலில் மதக் கடமைகளை நிறைவேற்றவிடாது ஊவா மாகாண
அமைச்சரொருவர் கட்டளை பிறப்பிததுள்ளமை தொடர்பில் பல்வேறு குற்றச் சாட்டுக்களும், விமர்சனங்களும்
வெளிவந்தமுள்ளன.எது எவ்வாறாக இருந்தாலும்,சட்டத்தையும்,மக்களை அடக்கி ஆளும்,மற்றும்
அச்சுறுத்தும் செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இந்த நாட்டு அரசு இடம் கொடுக்கக் கூடாது
என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமிருக்காது.இருந்த போதும்,எவர் எதை
செய்தாலும் அதனை அரசாங்கத்தின் மீது கூறை கூறுவதும் எந்தளவுக்கு நியாயம் என்பதையும்
ஒரு முறை பார்ப்பதும் அவசியம்.
மஹியங்களை பள்ளிவாசல் தாக்கப்பட்டு,அதனுல்
பன்றியின் இரத்தம் ஓட்டப்பட்ட சம்பவம் என்பது மனித அறிவுள்ள எவரும் செய்திருக்க முடியாது.அது
மிருகத்தை விட படு மோசமான அசிங்கத்தனமான மனித மிருகத்தின் செயல் என்பதில் எவருக்கும்
இரு வேறுகருத்திருக்காது.இந்த பள்ளி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும்,நேற்று
வெள்ளிக்கிமை ஜூம்ஆ தொழுகை இடம் பெறாமல் தடுக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம்
வகிக்கும் நீதி அமைச்சரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான அல்-ஹாஜ்.ரவூப்
ஹக்கீம்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான
றிசாத் பதியுதீன்,மற்றும் உள்ளுராட்சி,மாகாண
சபைகள் அமைச்சரும்,தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் தமது
கடுமையான கண்டனத்தை வெளியிட்டதுடன்,இது குறித்து ஜனாதிபதியின் நேரடிக் கவணத்திற்கு
கொண்டுவந்தனர்.இதனையடுத்து ஜனாதிபதி அவர்கள் இது குறித்து பாதுகாப்பு தரப்பினரின் கவனத்திற்கு
கொண்டுவந்திருந்தமை குறித்தும் வாசகர்கள் நன்கு அறிவார்கள்.அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்
அமைச்சர்கள் மற்றும் தான் எல்லாவற்றையும் தட்டிக் கேட்க வேண்டும்,அவர்கள் அதனையும்
நேர்மையாக செய்த போதும்,சமூகம் என்கின்ற சில அமைப்புக்கள் அவர்களுக்கு எதிராக கடும்
பொறுப்பற்ற விமர்சனங்களை வெளியிடுவதும்,அரசியல் வங்குரோத்து நிலையடைந்தவர்கள் தாங்கள்
மடடம் தான் முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் என்பதை சர்வதேசத்துக்கும்,இலங்கையில் உள்ள
ஊடகங்களுக்கும் முகம் காட்டுவதற்காக நீண்ட முடிவுறாத அறிக்கைகளை வெளியிடுவதும் நகைப்புக்குரியது
அன்றி இதன் மூலம் இந்த சமூகத்திற்கு எதனை பெற்றுக் கொடுக்க முடியும் என எனது உள்ளத்தில் எழும் கேள்வியாகும்.இந்தக்
கேள்விக்கான பதிலையும் என்னால் தெரிந்து வைத்துக் கொள்ள முடிந்துள்ளது.இந்த அரசாங்கத்தின்
நீதி அமைச்சராக இருக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீ்ம் நீதி அமைச்சர் என்பதால் ஒரு சில
சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியுமா ? அதே போல் அமைச்சர் றிசாத் ஜனாதிபதி்க்கு நெருக்கமானவர்
என்பதால் வடக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தடுத்து நிறுத்திவி முடியுமா
என்றால் அது எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.அதற்காக அவர்கள் அரசாங்கத்திலிருந்து
தமது பதவிகளை துறந்து வீதிக்கு வந்து அதிகாரமற்ற கும்பல்களுடன் வெள்ளைத்தால் அறிக்கைகளை
மட்டும் விடுவது இந்த முஸ்லிம் சமூகத்திற்கு காத்திரமானதை ஏற்படுத்திவிடுமா என்றால்
அது சாத்தியமற்ற செயல் என்பதை புத்தியுள்ளவர்கள் சிந்தித்து அறிந்து கொள்வார்கள் என்பது
பார்வையாகும்.
மஹியங்களை சம்பவம் தொடர்பில் அமைச்சர் றிசாத்
நீண்ட நேரம் அரச தலைமைகளுக்கு விளக்கப்படுத்தியுள்ளார்.அதே போல் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
நீர்கொழும்பில் ஜனாதிபதி கலந்து கொண்ட நீதிமன்ற திறப்பு நிகழ்வில் இது குறித்து பிரஸ்தாபித்தள்ளார்.அதற்கான
தற்போது நேற்று வெள்ளிக்கிழமை தம்புள்ளயினை போன்று ,மஹியங்கனையிலும் ஜூம்ஆ தொழுகையினை
சில பௌத்த இனவாத அமைப்புக்களுடன் நெருக்கமான உறவுகளை கொண்டவர்களால் தடுக்கப்பட்டுள்ளது.இது
அனுமதிக்க முடியாது என்று நாம் கூறினாலும்,அதரைன சட்டத்தின் மூலம் அனுக ணெவ்டிய தேவை
இருக்கின்றது.எல்லாவற்றுக்கும் அரசியல் வாதிகள் தான் பொருப்பு என்று கூறுவது பொருத்தமற்றது.எமது
சமூகத்தில் எத்தனை துறை சார்ந்தவர்கள் இருக்கின்றார்கள்,குறிப்பாக சட்டத்தரணிகள் இருக்கின்றார்கள்,ஏன்
இவர்களால் மத சுதந்திர உரிமை தடுக்கப்படுகின்றார் என்று நீதிமன்றில் வழக்கு தாக்கல்
செய்ய முடியாதுள்ள என்ற கேள்வி எழுகின்றது.அதனை செய்து பார்த்தால் இந்த பிரச்சினைக்கு
நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்பது பெரும்பான்யைமான மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.
இதை விடுத்து சட்டம் படுத்துறங்குகின்றது…….முஸ்லிம்
அமைச்ர்கள் பதவி விலக வேண்டும் என்று வெற்று
ரவை கோஷங்களால் ஆக போகின்ற காரியம் எதுவும் இல்லை.எமது நாட்டில் உள்ள ஜமிய்யத்துல்
உலமா தலைமையில் அனைத்து தரப்புக்களும் ஒன்று பட்டு செயற்படுவதற்கு முன்வரவேண்டும்.அதற்கான
அழைப்பினை ஜமிய்யத்துல் உலமா விடுக்க வேண்டும்.இதன் மூலம் முஸ்லிம்களின் ஒற்றுமையின்
பெறுமதியினை எதிராளிகள் அறிந்து கொள்வார்கள் என்பதுடன்,அதிகாரத்தில் இருக்கும் அனைவரும்
எம்மை நாடி வருவார்கள்.இதற்கான அடித்தளத்தை இப்புனித மாதத்தில் இடுவோம்…….
No comments:
Post a Comment