இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காணியினை அரசாங்க அதிபர் குழுவினர்
சுவீகரிக்க முயற்சிப்பதாகவும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை
எடுக்குமாறும் வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு,
இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சிசாலை ஊழியர்கள் கடிதமொன்றை அனுப்பி
வைத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 12 ஏக்கர் காணியில், முதற்கட்டமாக வனவள திணைக்களத்திற்கும், சிறுவர் பூங்காவிற்கும், இராணுவத்தினரின் புனித பூமிக்குமாக எமது காணி சுவீகரிக்கப்பட்டது.
அத்துடன், இரண்டாம் கட்டமாக தெற்குப் பகுதியில் தனிநபரால் மூன்று வீடுகள் கட்டப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரச அதிபரினால் அப்பகுதியும் எமக்கு மீட்டுத் தரப்படவில்லை.
அடுத்த மூன்றாம் கட்டமாக கிளிநொச்சி சாலைக்கு எதிரில், தற்போது பொதுச் சந்தை காணப்படும் காணியானது இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் தங்குமிடத்துக்குரிய ஏறத்தாழ 5 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டது. அத்துடன், அரசாங்க அதிபர் தலைமையில், ஏறத்தாழ 10 ஏக்கர் காணி எஞ்சியுள்ளது.
யுத்தம் முடிவடைந்து 4 வருட காலப்பகுதியில் புதிதாக ஆரம்பிக்கும் எமது கிளிநொச்சி சாலைக்கு அரசாங்க அதிபரினால் எதுவித உதவியும், கிளிநொச்சி சாலைக்கும், வெளிமாவட்ட ஊழியர்களுக்கும் செய்து தரப்படவில்லை. ஆனால், அரச அதிபர் எமக்கு செய்த உதவி ஒன்று எமது காணி அபகரிப்புத்தான்.
ஆனால், அதி மேதகு ஜனாதிபதியின் கிளிநொச்சி வருகையின் போது, கிளிநொச்சி சாலைக்குரிய காணியில், பஸ் நிலையமும், எரிபொருள் நிரப்பு நிலையமும் மற்றும் அலுவலகக் கட்டடமும் உழியர்களின் ஓய்வு அறையும், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை சேவையும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களின் அன்றாட அவசிய தேவகை;காக 10 புதிய பஸ் கொள்வனவு செய்து கொடுக்கும்படியும் அரசாங்க அதிபர் தலைமையின் கூட்டத்தில் கூறி இருந்தார்.
அத்துடன், அரசதிணைக்களங்களை அபகரித்தல், ஆக்கிரமித்தல், வேறு தேவைக்கு விட்டுக் கொடுத்தல், போன்றன இடம்பெறாமல் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் தற்போது, இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான காணி அரச அதிகாரிகளினால் அபகரிப்பு தான் நடைபெற்று வருகின்றதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

No comments:
Post a Comment