ஆடு
நனைகின்றது என்று ஓநாய் அளுகின்றது என்ற நிலை தான் தற்போது வடக்கு முஸ்லிம்களுக்கு
ஏற்பட்டுள்ளது.வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில்
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் எடுத்துவரும் முயற்சிகளுக்கு
முஸ்லிம் தலைமைகள் வழங்கும் ஒத்துழைப்பு என்பது
கரடி பிறைகானுவது போன்றே உள்ளது என்றால் அது மிகையாகாது.
1990
ஆம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இன்றும் அகதிகாளக வாழும் ஒரு துரதிஷ்டம்
காணப்படுகின்றது.அவர்களை அகதிகள் என்று ஏளனம் செய்யும் செயற்பாடுகளும் முடிந்ததாக தெரியவில்லை.தான்
வாழ்ந்த பிரதேசங்களில் மீள சென்று வாழ்வதற்கு அவர்கள் முயற்சித்த போதும்,அதற்கு எதிராக
இனவாத அமைப்புக்கள் முன்னெடுக்கும் சிதது விளையாட்டுக்களுக்கு முடிவே இல்லை.
இவ்வாறானதொரு
துரதிஷ்டமான நிலையில் பல தரப்பின் தாக்குதல்களுக்கு மத்தியில் வடக்கு முஸ்லிம் மக்களின்
மீள்குடியேற்றத்தை முன்னெடுக்கும் போது அதற்கு எதிராக தமது சமூகத்தின் சில புல்லுருவிகள்
அதனை காட்டிக் கொடுத்தும்,தட்டிப்பரித்தும் தமது பெயரினை உரிகைக்காரராக மாற்றும் நிலை
காணமுடிகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் ஆயிரத்துக்கும்
மேற்பட்ட குடும்பங்கள் தாம் வாழந்த மண்ணில் மீள குடியேற வருகின்ற போது,அவர்களை வெளி
மாவட்ட மக்களாக காட்டி அவர்களை விரட்டியடிக்க
எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக நியாயத்தை விளக்கப்படுத்த முயற்சிக்கும் போது
அமைச்சர் றிசாத் பதியுதீனை இனவாதியாக காட்டி அதில் தமது அரசியல் லாபங்களை பெற்றுக்
கொள்ளும் நபர்களின் வலையில் சிக்கித் தவிக்கும் சில முஸ்லிம் அரிசயல்வாதிகளின் இயலாத்
தன்மையினை சமூகம் ஒரு போதும் அனுமதிக்காது என்பதை தெளிவாக சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
முல்லைத்தீவுக்கு
அண்மையில் விஜயம் செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம்
அப்பிரதேச இணைப்பாளர் தெரிவித்துள்ள விடயங்களை பார்க்கும் போது,மாவட்ட அபிவிருத்தி
குழுவின் தலைவராக இருக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்டு
அரசாங்க அதிபரினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுமதி
வழங்க வேண்டும் என்ற தோரணையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.நகைப்புக் கிடமானதொன்று என்றே
கூறவேண்டியுள்ளது.மாவட்ட அபிவிருத்தி விடயங்களில் பிற மாவட்ட அமைச்சர்கள் தமது ஆதிக்கத்தை
செலுத்த முடியாது என்ற ஒரு நடை முறை காணப்படுகின்ற போது,அதற்கு அப்பால் சென்று எதனை
சாதிக்க முடியும் என்பதும் எமக்குள் எழுந்துள்ள கேள்வியாகும்.ஒரு மாவட்டத்தின் அபிவிருத்தியினை
பொருத்த வரையில் அந்த மாவட்டத்தின் திட்டமிடல் சார் பணிகளை மேற்கொள்வதும்,அதற்கு தேவையான
நிதியினை பெற்றுக் கொடுப்பதும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருக்கே உரிய அதிகாரமாகும்.இது
இவ்வாறு இருக்கையில் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் பேசியே இந்த திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட
வேண்டியது எனது கணிப்பாகும்.
குறிப்பாக
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியாவலை பகுதியில் அரசாங்கத்துக்கு சொந்தமான காணியினை
உரிய முறையில் விடுவிப்பு செய்து அதில் முல்லை முஸ்லிம்களை மீள்குடியுற்றம் செய்ய எடுத்த
நடவடிக்கை இன்னும் முழுமையாக ஆரம்பிக்கப்படவில்லை.இதற்கு பல தரப்பில் எதிர்ப்புக்கள்
கிளம்பியுள்ளன.இவற்றை சமாளித்துக் கொண்டு,மக்கள் வாழக் கூடிய பிரதேசங்களில் அவர்களை
குடியமர்த்துவது தான் அம்மக்களின் எதிர்கால வாழ்வாதாரத்துக்கு பேருதவியாக அமையும் என்பது
யதார்த்தமாகும்.இதனை புரிந்து கொள்ள வக்கில்லாதவர்கள் முஸ்லிம்களுக்கு ஏற்கனவே பகிர்ந்தளிக்கப்பட்ட காணியினை மீண்டும் முஸ்லிமக்ளுக்கு வழங்க நடவடிக்கையெடுப்பதாக
தெரிவித்து மேலும் முல்லை முஸ்லிம்களின் உரிமைகளுக்கு ஆப்பு வைக்கும் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளனர்.முல்லை
மாஞ்சோலையிலிருந்து சுமார் 7 கிலோ மீ்ட்டர் துாரத்தில் அமைந்துள்ள முறிப்பு கிராமம்
என்பது ஏற்கனவே முஸ்லிம்களின் தேவைகளுக்காக வழங்கப்பட்டிருந்தது.அந்த காணியானது
77 பேருக்கு மட்டுமே உரித்தானது.1990 ஆம் ஆண்டின்
வெளியேற்றத்தின் பின்னர் முல்லைத்தீவில் ஒரு அங்குலம் அரச காணி கூட முஸ்லிம்களுக்கு
வழங்கப்படவில்லை என்று அரசாங்க அதிபரின் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.12 கிராமங்களில்
முஸ்லிம் வாழ்ந்தனர் 1990 களுக்கு முன்னர்
1445 குடும்பங்கள் இக்கிராமங்களில் வாழந்துள்ளனர்.இன்று அந்த குடும்பங்கள் 5 ஆயிரத்தினையும்
தாண்டியுள்ள நிழைலயில் மீள்குடியேறவரும் இதே மாவட்ட மக்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும்
என்பதற்காக உரிய நடவடிக்கைகள் அரச அதிபரினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இந்த
நடை முறைக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைச்சர் றிசாத் பதியுதீன் மத்திய அரசு மற்றும்
மாகாண சபை என்பனவற்றுடன் கலந்துரையாடி பெற்றுக் கொடுத்துமுள்ளார்.சில தடங்கள்களால்
முள்ளியாவலை காணி பகிர்வு நகர்வு தற்காலிக தாமத்தில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டியே
ஆக வேண்டும்.வடக்கில் தற்போது இரானுவ ஆக்கிரமிப்பு உச்ச கட்டத்தில் காணப்படுவதால்.அரச
காணிகளை விடுவிப்பு செய்வது என்பது அவ்வளவு இலகுவான ஒரு பணியல்ல என்பதை அதனோடு தொடர்புபடட
பணியாற்றும் அதிகாரிகளிடடத்தில் இருந்து தெரிந்து கொள்ளமுடிகின்றது.நாட்டின் பாதுகாப்புக்கு
தேவையானது அரசு செய்ய வேண்டும் என்பதில் முஸ்லிம்களுக்கு எவ்வித மாற்றுக் கருத்துக்களும்
இல்லை என்பதை பல சந்தர்ப்பங்களில் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.அதே போல் 2009
ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டட சமாதானம் மக்களின் சுதந்திர வாழ்வுக்காக என்பதை நினைவுபடுத்தி
தாம் ஏற்கனவே வாழந்த மண்ணில் வாழுவதற்கு வழி அமைத்து கொடுங்கள் என்றே மக்கள் இன்று
கேட்டு நிற்கின்றனர்.ஒன்றுக் கொன்று முரண்பாட்டை தோற்றுவிக்கும் ஒரு செயற்பாட்டின்
உடன்பாட்டை எட்டுவதற்கு எடுக்கப்படும் ஒரு முயற்சியாக வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை
நாம் பார்க்க வேண்டும்.அதன் மூலம் மீண்டும் வடக்கில் அமைதியான ஒரு சூழலை தோற்றுவிக்க
முடியும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.மாவட்டத்தினை பற்றி தெரியாதவர்கள் அத்துமீறி
தமது மூக்கினை நுழைக்கும் போது அது அந்த மாவட்டத்தின் பரம்பலுக்கும்,கலாச்சாரத்துக்கும்,மக்களின்
இன உறவுகளுக்குமிடையில் ஏற்படுத்தும் பெரும் இடைவெளியாகும்.சொல் புத்தி வேண்டும்,அல்லது
சுய புத்தி வேண்டும் என்ற பழமொழிக்கு ஒப்ப செய்கின்றவர்களுடன் சேர்ந்து செல்லுகின்ற போது தான் எதையும் அர்த்தப்
புஷ்டியுடன் அடைந்து கொள்ளமுடியும்.
.
No comments:
Post a Comment