Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, March 19, 2013

கொமாண்டோ பாதுகாப்புடன் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்த மணிரத்னம்!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் சினிமாவின் இயக்குனர்களின் ஏற்பாட்டில் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆரம்பமாகியது.
இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் தமிழ்ச் சினிமாவின் இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், ஒளிப் பதிவாளர்கள், நடன இயக்குனர்கள், ஸ்டன்ட் மாஸ்டர்கள் உட்பட பெப்சி தொழிற்சங்கத்தினர் உட்பட நடிக நடிகையர்களும் கலந்து கொண்டனர்.


தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனரான மணிரத்னம் அவர்கள் உண்ணாவிரதம் ஆரம்பித்து பல மணி நேரம் கழித்து சரியாக 12:30 மணியளவில் துப்பாக்கி ஏந்திய கொமாண்டோப் படை வீரரின் பாதுகாப்புடன் கறுப்பு நிறக் காரில் உண்ணாவிரதப் பந்தல் அருகில் வந்து இறங்கினார்.
உண்ணாவிரதப் பந்தலில் சரியாக 20 நிமிடங்கள் மட்டுமே இருந்திருப்பார். கருணாநிதியின் உண்ணாவிரதம் போல் திடீரென எழுந்து 12:50 மணியளவில் வீட்டுக்கு நடையைக் கட்டினார்.
ஏராளமான இயக்குனர்கள், சினிமா பிரபலங்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மணிரத்தினத்தின் இச்செய்கை பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
மணிரத்தினத்தின் இச்செய்கையைக் கண்டித்து பலரும் பேசிக் கொண்டார்கள்.
ஈழத் தமிழர் பிரச்சினைகளை வைத்து கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் இருந்து கடல் வரை திரைப்படங்களை எடுத்து கோடி கோடியாகச் சம்பாதித்த மணிரத்தினம், ஈழத் தமிழர்களுக்காக நடந்த துயர விடயத்தில் இவ்வாறு செய்தது பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது.
தமிழ்நாடு திரைப்பட யூனியனில் இருந்த மூத்த உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கூறினார்,
நாளொன்றுக்கு 500 ரூபாய் உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றுகிற நாங்களே இன்று வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று விட்டு ஈழத்தமிழர்களுக்காக காலையிலேயே வந்து உண்ணாவிரத்தில் கலந்து கொள்கின்றோம்.
ஆனால் கோடி கோடியாகச் சம்பாதிக்கும் மணிரத்தினத்துக்கு என்ன நடந்தது?
-சென்னையில் இருந்து தமிழ் சி.என்.என் செய்திகளுக்காக துருவன்-
mani3
mani2a
mani1
mani6
mani5
mani7

No comments:

Post a Comment