
புதிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரலான ஹாசிம் குர்ஷி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இவர் தனது நியமன கடிதத்தை இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார். இதன்போதே ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராக செயற்பட்ட சீமா இலாஹி பலூச் கடந்த டிசெம்பர் 15ஆம் திகதி தனது பதவி காலம் நிறைவடைந்தமையினால் நாடு திரும்பினார். இதனை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரலான ஹாசிம் குர்ஷி பாகிஸ்தான் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment