
ஈராக் தலைநகரான பக்தாத்திலேயே இன்று செவ்வாய்க்கிழமை இந்தக் கார் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. ஷியா முஸ்லிம்கள் வாழும் பகுதிகளை இலக்குவைத்தே இந்தக் கார் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
150 க்கும் அதிகமானவர்கள் இந்தக் குண்டுத் தாக்குதல்களில் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டுப் பொலிஸார் கூறியுள்ளனர்.
ஈராக்கில் இன்றையதினம் 10 கார் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் பதவி கவிழ்க்கப்பட்ட 10ஆவது வருட பூர்த்தி அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையிலேயே இந்த குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Views: 297 |
0 0
|
No comments:
Post a Comment