தமிழக அரசியல்வாதிகள் இலங்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் வேலாயுதம் தயாநிதி எனப்படும் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தல் இரண்டு தரப்பினரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவை தொடர்பில் தற்போது விசாரணை நடாத்துவதில் எவ்வித பயனும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு யார் அதிகமாக குரல் கொடுத்தோம் என்பதனை நிரூபிக்கும் போட்டியொன்றே தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசியல்வாதிகள் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
தீக்குளிப்பு, பௌத்த பிக்குகள் மீது தாக்குதல் போன்ற சகல விதமான செயற்பாடுகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசியல்வாதிகள் எதனையும் செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையில் பாரியளவு அபிவிருத்தித் திட்டங்களுக்கு பங்களிப்பு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வீடுகளை நிர்மானித்தல், ரயில் பாதைகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் மத்திய அரசாங்கம் பங்கெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சில வேளைகளில் மாநில அரசாங்கங்களினால் நேரடியாக வேறும் நாடுகளுடன் தொடர்புகளைப் பேணுவதில் சட்டச் சிக்கல்கள் இருக்கக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், தமிழக அரசியல் கட்சிகள் சிங்கள மக்களுடன் எங்களுக்கு முரண்பாடுகளை ஏற்படுத்து முனைப்புகளில் தீவிரம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் n;தாடாபில் எந்தவொரு ஊடகமும் வெளிப்படுத்தவில்லை எனவும், அனைத்து ஊடகங்களும் இலங்கை இராணுவம் தொடர்பிலேயே கவனம் செலுத்தி வந்தன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் தொடர்பிலான பின் விசாரணைகளினால் எவ்வித பயனும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக 200000 பேர் கொல்லப்பட்டதாகவும், இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழ் மக்கள் ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைப்பதில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
சில நாடுகளில் தீய நோக்கங்களுக்காக தொடர்ந்தும் பணம் திரட்டப்பட்டு வருவதாக உறவின, நண்பர்களின் மூலம் அறிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
பெருமளவிலானவர்கள் இங்கு காணப்படும் தமிழீழ விடுதலைப் புலி சொத்துக்களை சொந்தத் தேவைகளுக்காகவே பயன்படுத்துவதாகவும், பொது நோக்கங்களுக்காக பயன்படுத்துவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சமூகம் அபிவிருத்திப் பணிகளில் பங்களிப்பு செய்வதுடன் தங்களது பணிகளை வரையறுத்துக் கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் மற்றும் மக்கள் எங்களது அரசியலை தீர்மானிக்க அனுமதியளிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
கடந்தவை கடந்து விட்டன, இரண்டு தரப்பினரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் எனவும், அது தொடர்பில் விசாரணை நடாத்துவதில் என்ன பயன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மூன்று தசாப்த கால யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகள் பூர்த்தியாகியுள்ளதாகவும், அபிவிருத்திப் பணிகள் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னமும் பல தேவைகள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் அதற்கு அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment