Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, March 24, 2013

வடக்கு தேர்தல்களை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன!


Srilanka logo_CI
வடக்கு தேர்தல்களை நடாத்துவதற்கு தேவையான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வடக்கில் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவதற்கு தேவையான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் போதும் வடக்குத் தேர்தல்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வடக்குத் தேர்தல்களை அரசாங்கம் தாமதப்படுத்தி வருவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கின் சில பகுதிகளில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத காரணத்தினால் தேர்தல்களை நடாத்துவதற்கு தாமதமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பெருமளவில் நிலக்கண்ணி வெடி அகழ்வுப் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் விரைவில் தேர்தல் நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்பட்டதன் பின்னர் அந்தப் பிரதேச மக்கள் தங்களது பிரதிநிதி ஒருவரை முதலமைச்சராக்கும் சந்தர்ப்பம் கிட்டும் என அவர் தெரிவி

No comments:

Post a Comment