
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் மீண்டும் நாடு திரும்பினால் அவரை நிச்சயமாக நரகத்திற்கு அனுப்புவோம் என தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
நேற்று இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள வீடியோ செய்தியில் முஷராப்பை நரகத்திற்கு அனுப்பும் சிறப்பு குழு ஒன்றை முஜாஹிதீன் அமைப்பினர் தயார் படுத்தி வருவதாகவும் அக்குழுவில் தற்கொலை குண்டுதாரிகள், ஸ்னைப்பர் விரர்கள், சிறப்பு சண்டை வீரர்கள் என அனைவரும் அடங்கியிருப்பதாகவும் முஷாராப் பாகிஸ்தான் திரும்புவராயின் நிச்சயம் அவர் கொல்லப்படுவார் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
முஷாரப்பை படுகொலை செய்வதற்கு பிரிதொரு முறை முயற்சி செய்த ஆத்னன் ரஷீத் என்பவரே இம்முறையும் இவ்வீடியோவில் மிரட்டல் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment