இலங்கையின் இறுதியுத்தத்தில் கொல்லபட்ட பொதுமக்கள் தொடர்பில் விசாரணைகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு அமெரிக்கா இலங்கையிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் நேற்று வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இலங்கைக்கு நாம் ஆறு மாதங்கலுக்கு முன்னரே எச்சரித்திருந்தோம். நீங்கள் முன்னே அடியெடுத்து வைக்காவிட்டால் நாம் இதே போன்று மீண்டும் தீர்மானத்தை கொண்டு வருவோம் என கூறியிருந்தோம். ஆனால் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை. மீண்டும், இலங்கை என்ன முடிவுகளை எடுக்க போகிறது என நாம் பார்க்க வேண்டும்.
நாம் முன்னரே கூறியது போன்று அவர்கள் எதையும் செய்யவில்லை என அனைத்துலக சமூகம் கருதினால், நாம் அடுத்த அடிகளை எடுத்து வைக்க முடியும் என்றார்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐ.நா சபையில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க தீர்மானத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்த 2014ம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறும் அமர்வுகளின்போது இந்த பரிந்துரைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்பட்டுள்ளதா என மனித உரிமை பேரவை ஆராயவுள்ளது. இதற்காக ஒரு விசேட அமர்வு ஒன்றையும் நடத்தவுள்ளது.
இவ்வாறு ஒரு நாட்டுக்கு எதிராக விசேட அமர்வு ஒன்றை மனித உரிமை பேரவை நடத்துவது இதுவே முதன்முறை என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அசுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு பரிந்துரையையும் அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment