
இலங்கையின் வடமேற்கு மாகாணமாக குருநேகாலா மாவட்டத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில்
இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஐ.நா. மனித உரிமை சபை கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா நிறைவேற்றிய தீர்மானத்தால் எங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலோ, தோல்வியோ இல்லை. இந்த தீர்மானத்தை கண்டு நாங்கள் ஆச்சரியப்படவோ, திகைப்படையவோ இல்லை.
இதைப் போன்ற தாக்குதல்கள் விடுதலை புலிகள் ஆதரவாளர்களிடமிருந்தும், இலங்கைக்கு எதிரான சக்திகளிடமிருந்தும் வரும் என்பது நான் எதிர்பார்த்தது தான். எனது அரசின் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே தவறானவை. வேறு விதமான உள் நோக்கங்கள் கொண்டவை.
கடந்த 2009-ம் ஆண்டிற்கு முன்னர், இந்நாட்டின் ஒரு பகுதி ஈழம் என்று அடையாளம் காட்டப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் போது இதற்கு சிறிய அளவிலான அங்கீகாரமும் அளிக்கப்பட்டது.
சர்வதேச நாடுகளின் தலையீட்டில் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை நாங்கள் மதித்திராவிட்டால் இன்றைய இலங்கையின் நிலை என்னவாகி இருக்கும்?
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment