
பொலீஸாரின் கெடுபிடிகளுக்கு
மத்தியில் இலங்கை முஸ்லிம்கள் இன்று சிங்கள இனவாத பொதுபலசேனாவுக்கு எதிராக தமது வர்த்தக
நிலையங்களை மூடி ஹர்த்தால் அனுஷ்டித்துள்ளது முஸ்லிம் உரிமைக்கான அமைப்பின் தலைவரும்,மெல்
மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் நன்றி தெரிவித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
எமது அமைப்பின்
வேண்டுகோளையேற்று வடக்கு,கிழக்கு உட்பட மேலும்
பல்வேறு பிரசேதங்களில் உள்ள வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி அமைதியான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
இந்த அமைதி ஜனநாயக
ரீதியான நடவடிக்கைகு தடங்கள்களை பொலீஸாரும்,ஏனைய அரசாங்கத்தின் தரப்பும்,மத அமைப்புக்களும்
நடவடிக்கைகளை எடுத்த போதும்,உணர்வுள்ள முஸ்லிம்கள் தமது எதிர்ப்பை அரசாங்கத்துக்கு
சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த ஹர்த்தாலை
நிறுத்தும் வகையில் என்னை விசாரணைக்குட்படுத்திய போதும்,அதற்கு அச்சம் கொள்ளும் அளவுக்கு
எனது மன நிலை இல்லையென்பதையும்,எனது சமூகத்திற்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பதை ஒரு
போதும் நிறுத்தப் போவதில்லை என்றும் முஜிபுர் ரஹ்மான் அக்கறை இணையத்தளத்திற்கு வழங்கிய
செவ்வியில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment