- புத்தளம் epUgu; -,u;\hj; -
கொழும்பின் புற
நகர் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான பெஷன் பங் நிறுவனத்தின்
ஆடை களஞ்சிய சாலையின் மீது மேற்கொள்ளப்பட்ட தக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்ட கும்பலை
கைது செய்து சட்டத்தின் முன் அவர்களை ஆஜர்படுத்தி அதற்கான தண்டனையினை பெற்றுக் கொடுக்கும்
பொறுப்பை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி
ஹூனைஸ் பாருக் தெரிவித்துள்ளார்.
அண்மையக் காலமாக
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற
பெரும்பான்மை இனக்குழுவினரின் அடாவடித்தனங்கள் எல்லை மீறிய நிலையில் உள்ளதாகவும்,இதற்கு
தகுந்த நடவடிக்கையெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில்
இருந்து வந்த வண்ணமுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
பொதுபலசேனா மற்றும்
சிங்கள ராவய என்னும் பெயர்களில் மேற்கொள்ளப்படும் தாக்குதல் மற்றும் விசமத்தனமான பிரசாரங்கள்
என்பனவற்றால் இலங்கை முஸ்லிம் பெரும் மன வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற
உறுப்பினர் புலம் பெயர் முஸ்லிம்கள் இந்த விடயம் குறித்து தம்மிடம் கடுமையான அதிருப்தியினை
வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
30 வருட பயங்கரவாதம்
ஒழிக்கப்பட்ட நிலையில்,அந்த சவால்களுக்கு முகம் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான
அரசாங்கம் தற்போது நாட்டில் பிழையான செயற்பாடுகளில் .ஈடுபடும் இந்த கடும் போக்கு இனவாத
அமைப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்காமை குறித்து மக்கள் மத்தியில் விமர்சனங்கள்
ஏற்படடள்ளதாகவும் கூறினார்.
இதனை தற்போதைய
சந்தரப்பத்திலாவது தடுத்து நிறுத்துவதுடன்,தாக்குதல் தொடர்பில் தொடர்பபட்டவர்களை தராதிரம்
பாராமல் கைது செய்து சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டிய தார்மீக பொருப்பு உள்ளதாகவும்,பாராளுமன்ற
உறுப்பினர் ஹூனைஸ் பாருக் சுட்டிக் காட்டி அறிக்கையொன்றினை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment