Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, March 19, 2013

சென்னை வந்த பிக்குகளுக்கு பலத்த பாதுகாப்பு!

pikkukal_001 இந்தியாவின் பீகார் மாநிலம், புத்தகயாவில் இருந்து சென்னைக்கு வந்த புத்த பிக்குகள் 160 பேரை தமிழக பொலிஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.


சென்னை மத்திய ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அனைத்து புத்தபிக்குகளையும் பாதுகாப்பாக வானில் ஏற்றி, எழும்பூரில் பொலிஸ் ஆணையாளர் அலுவலகம் எதிரில் கென்னத் லேனில் உள்ள புத்த மடத்தில் கொண்டு தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த புத்தபிக்குகள் மீது கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று காலையில் சென்னை மத்திய ரயில் நிலையத்திலும் புத்த பிக்குகள் மீது 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டது.
இச்சம்பவங்களை தொடர்ந்து பொலிசார் புத்தபிக்குகள் தங்கி இருக்கும் இடங்கள் மற்றும் அவர்கள் வந்து செல்லும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலையில் புத்தகயாவில் இருந்து புறப்பட்டு ரெயில் மூலமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு 120 சிங்களவர்கள் வந்தனர்.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் 40 பேரும், ஜி.டி.எக்ஸ்பிரஸ் ரயிலில் 120 பேரும் சென்ட்ரலில் வந்து இறங்கியதும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான பொலிசார் அவர்களை பத்திரமாக அழைத்து சென்றனர்.
சிங்களர்வகள் மீதான தாக்குதல் காரணமாக நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம், ஏர் லைன்ஸ் அலுவலகம் மற்றும் எழும்பூரில் உள்ள இலங்கை வங்கி ஆகியவற்றிலும் பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

No comments:

Post a Comment