Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, March 18, 2013

இந்தியா செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்பு; இரு நாடுகளும் அவசர பேச்சு

இந்தியாவுக்குச் செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் புதுடில்லி மற்றும் சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர்களுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் அவசர பேச்சுவார்த்தையொன்று ஆரம்பித்துள்ளது.


இரண்டாவது நாளாகவும் தமிழ்நாட்டில் வைத்து இலங்கை பௌத்த பிக்குமார்கள் இருவர் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே இந்த அவசர பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது.

இந்தியாவுக்குச் செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்புக்கு இந்திய அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று இலங்கை உயர்ஸ்தானிகர்களால் மேற்படி பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment