சர்வதேசத்திடம் கடன் பெறுவது சாப்பிடுவதற்காக அல்ல: மத்தலையில் ஜனாதிபதி
நாங்கள் சர்வதேசத்திடம் கடன் பெறுவது சாப்பிடுவதற்காக அல்ல. நாட்டின்
அபிவிருத்திகளை மேற்கொள்ள சர்வதேசத்திடம் கடன்களை பெறுகின்றோம். ஆனால்
சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதன் ஒரு அங்கமாகவே மத்தல சர்வதேச
விமானநிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தெரிவித்தார்.
இலங்கையின்
இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்தை இன்று
உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத்
தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் பல அபிவிருத்தி திட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் மூலம்
நாட்டுக்கு அதிகளவு வருமானம் கிடைக்கின்றது.
மத்தல பகுதியில்
இவ்வாறான தொரு விமானநிலையம் அமையப்பெறும் என யாரும் எதிர்பார்த்திருக்க
மாட்டார்கள். ஆனால் இலங்கையின் 2ஆவது சர்வதேச விமானநிலையமாக இது
நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment