உலகின் முதனிலை ஊடகங்களின் ஒன்றான பிபிசீ சேவையின் இலங்கை ஒலிபரப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக பிபிசீ உலக சேவையினால் ஒலிபரப்புச் செய்யப்பட்டு வந்த சகல நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் இடம்பெறும் தொடர் தலையீடுகளே சேவை நிறுத்தத்திற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை நேயர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்திற்கு வருந்துவதாக பி.பி.சீ உலக சேவையின் பணிப்பாளர் பீட்டர் ஹொரொக்ஸ் தெரிவித்துள்ளார்.
எமது நிகழ்ச்சிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இடையூறுகள் தடைகளை தொடர்ந்தும் பொறுத்துக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 16, 18 மற்றும் 25ம் திகதிகளில் ஒலிபரப்புச் செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்திற்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்ததாகவும், இந்த எச்சரிக்கையை கருத்திற் கொள்ளாது தொடர்ந்தும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்ச்சி தொடர்பில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் அதனை நேரடியாக அறிவிக்க வேண்டுமே தவிர ஒலிபரப்பில் தலையீடு செய்யக் கூடாது என அவர் தெரவித்துள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளினால் நேயர்கள் பிழையாக வழிநடத்தப்படக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையம் ஊடாகவும், பி.பி.சீ மென்பொருள் ஊடாகவும் நிகழ்ச்சிகளை தொடர்ந்தும் கேட்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment