கொழும்பு
மாநகர சபையின் எதிர் கட்சி தலைவரும்,முன்னால் அமைச்சருமான மஹ்ரூப் அவர்களின் மறைவு
குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் ,அமைச்சருமான றிசாத் பதியுதீன்
தமது ஆழ்ந்த கவலையினை தெரிவிப்பதாகவும்,அன்னாரின் சுவன வாழ்வுக்காக பிரார்த்திப்பதாகவும்
வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மர்ஹூம்
மஹ்ரூப் அவர்கள் சிறந்த அரசியல்வாதி என்பதுடன்,கொழும்பு மாவட்ட மக்களுடன் மிகவும் நெருக்கத்துடன்
செயற்பட்ட ஒருவருமாவார்.ஜக்கிய தேசிய கட்சியின்
ஊடக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டாலும்,சகல மக்களுக்கும்,குறிப்பாக கல்வி,விளையாட்டு
துறை மேம்பாட்டுக்காக அதிகம் பணிகளை செய்த
ஒருவர் என நினைவு கூர்ந்த அமைச்சர் றிசாத் பதியுதீன்,2011 ஆம் ஆண்டிலிருந்து ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்க கட்சியுடன் இணைந்து கொழும்பு மாநகர சபையின்
எதிர் கட்சி தலைவராக இன்று வரை பணியாற்றியுள்ளார்.
அன்னாரின்
இழப்பால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கும்,ஆதரவாளர்களுக்கும் தமது ஆழ்ந்த
அனுதாபத்தை தெரிவிப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment