இலங்கையில் ஜப்பான் முதலீட்டாளர்கள் மதலீடுகளை செய்வது பாராட்டுக்குரிய என்று கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர றிசாத் பதியுதீன் இன்று தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு வருகைத் தந்துள்ள ஜப்பான் முதலீ்ட்டாளர்கள்,அமைச்சரை அமைச்சில் சந்தித்து ககலந்துரையாடிய போது மேற்கண்டவாறு கூறினார்.
நெல்லினை அரிசியாக மாற்றும் போது அதிலிருந்து வெளியாகும் உமியினை கொண்டு மீள் சக்தி உற்பத்தியினை செய்வது குறித்து தாங்கள் தமது கவனத்தை செலுத்தவுள்ளதாகவும்,அதன் மூலம் சூழலுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களையும் தடுக்க முடியும் என்றும் ஜப்பானிய துாதுக் குழுவினர் அமைச்சரிடத்தில் சுட்டிக்காட்டினர்.
ஜப்பான் நாட்டில் தற்போது இந்த முறை பயன்படுத்தப்படுவதாகவும்,ஜரோப்
குறிப்பாக இலங்கையில் இவ்வுற்பத்திக்கா மூலப் பொருள் காணப்படுவதாகவும் அதனை இங்கு உற்பத்தி செய்வது குறித்து தாங்கள் கவனம் செலுத்துவதாகவும் குழுவினர் அமைச்சரிடத்தில் எடுத்துரைத்தனர்.அதன் மூலம் எரிபொருள்,மற்றுமு் மின்சாரம் என்பனவற்றின் செலவீனங்களை குறைக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையுடன்,ஜப்பான் கொண்டிருக்கும் நட்புறவு குறித்து சிலாகித்து பேசிய அமைச்சர் றிசாத் பதியுதீன்,இலங்கைக்கு ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றி கூறினார்.
No comments:
Post a Comment