Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, October 20, 2012

புலம்பெயர்ந்தோரின் உதவியை பெறுவதற்கு கேபி உதவுவார்: அமைச்சர் கெஹெலிய


புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தை முன்னேற்றமடைந்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில்...

நெர்டோ அமைப்பினை நடத்திவருகின்ற குமரன் பத்மநாதன் (கேபி) தலைமையினான குழுவினரே புலம்பெயர் தமிழருக்கும் அரசுக்குமிடையிலான பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை அரசுமீதான அவநம்பிக்கை மற்றும் தவறான சிந்தனைகளைக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர்களின் மனநிலையை மாற்றுவதற்கு ஒரு மூலோபாயமாக கேபியை அரசு பயன்படுத்தி வருகிறது. கேபி விடயத்தினை நாங்கள் நேர்வழியில் பயன்படுத்த வேண்டும். புலம்பெயர் தமிழர்களையும் வேறு முதலீட்டாளர்களையும் உரியமுறையில் அணுகுவதற்கு கேபியை நாங்கள் பயன்படுத்துகின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் எச்சங்களால் மேற்கொள்ளக்கூடிய நிழல் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டவருவதற்கு கேபி போன்றவர்களின் உதவி தேவைப்படுகிறது. இவ்விடயம் நாட்டுக்கு நிச்சயமாக நன்மையையே தரும். முன்னாள் எல்.ரி.ரி.ஈ., ஜே.வி.பி. உறுப்பினர்களின் தற்போதையை நிலையினை யாரும் மறந்துவிட வேண்டாம். அதுபோல் கோபியின் நிலையும் மாறும்.

கேபிக்கு நாங்கள் முழு சுதந்திரம் வழங்கவில்லை. ஒரு வரையறைக்குள் அவரது நடவடிக்கைகள் அமையும் என்பதையும் மறந்துவிட வேண்டாம். வடக்கு, கிழக்கில் பாரிய மீள் கட்டுமாணங்களை அவசரமாக மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதால், புலம்பெயர்ந்தோரின் உதவிகளைப் பெறுவதற்கு கேபி போன்றவர்களின் தயவு அளப்பரியது என்றும் அமைச்சர் கெஹெலிய மேலும் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment