Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, October 20, 2012

வவுனியா பகுதியில் 4.6 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

வவுனியா கோவிற்குளம் பகுதியில் 4.6 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், கஞ்சா வைத்திருந்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 16ஆம் திகதி வவுனியா பொலிஸ் விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின் படி விஷேட அதிரடி படையினரால் 4.6 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

வத்தளை ஏகல பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரே கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment