Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, September 11, 2012

புத்தளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆயுததாரிகள் கொள்ளை




புத்தளம் கொழும்பு வீதியில் தி்ல்லையடி பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் புகுந்த ஆயுதம் தரித்த கும்பல் பணியாற்களை தாக்கிவிட்டு பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை 3.10 அளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.


இரவு பணியில் இருந்த சில ஊழியர்களை முதலில் தடியால் தாக்கியுள்ளனர். அப்போது ஒரு பணியாள் பிளாஸ்டிக் கதிரையினால் கொள்ளையரை தாக்கிய போது தம் வசம் வைத்திருந்த துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு,மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக ஊழியர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட பணத் தொகை குறித்து இன்னும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புத்தளம் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment