Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, September 11, 2012

புத்தளத்தில் மாணவன் கொலை-சந்தேக நபர் கைது


புத்தளத்தில் 16 வயதான மாணவரொருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார். 

புத்தளம் மரிக்கார் வீதியில் வசிக்கும் முஹம்மட் பாறூக் முஹம்மட் அல்தாப் (வயது 16) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 



நேற்று திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் இம்மாணவனின்  வீட்டுக்கு வந்த 27 வயதான  இளைஞரொருவர் இம்மாணவனை  கத்தியால் குத்தியதாக இம்மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இவர்கள் இருவருக்கிடையே காணப்பட்ட தனிப்பட்ட தகராறே இச்சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாமென்று தாம் எண்ணுவதாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.

படுகாயமடைந்த மாணவன் உடனடியாக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் குறிப்பிட்டனர். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக  புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேக நபரைக் கைதுசெய்துள்ள புத்தளம் பொலிஸார் அவரிடம் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment