Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, September 5, 2012

புதிய மாற்றத்திற்கு அணிதிரள்வோம்-அமைச்சர் றிசாத் அழைப்பு


வடக்கில் முஸ்லிம்கள் கௌரவமாக  எவருக்கும் அடிமைப்படாமல் வாழுவதற்காக கிழக்கு மாகாண முஸ்லிம்கள தமது வாக்குளை ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சிக்கு அளித்து அதனை உறுதிப்படுத்துமாறு  வேண்டியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தோப்பூரின் புதிய அரசியல் பாதைக்கு தன்னை அர்ப்பணம் செய்துள்ள வேட்பாளர் அப்துல் ரஸ்ஸாக்கின் வெற்றியை உறுதிப்படுத்த உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கலந்து கொண்ட கிழக்கு தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டம் நள்ளிரவு 12.00 மணி வரை தோப்பூரில் இடம் பெற்றது.வேட்பாளர்.தொழிலதிபர் அப்துல் ரஸ்ஸாக் தலைமையில் இடம் றெற இந்த கூட்டத்தில்,கட்சியின் தேசிய இணைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,கிண்ணியா நகர முதல்வரும்,வேட்பாளருமான டாக்டர் ஹில்மி மஹ்ரூப்,மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ய எஹியான்,பிரதி தலைவர் மௌலவி பைரூஸ்,நெடா அமைப்பின் தலைவர் அமீன் உட்பட பலரும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில் கூறியதாவது –
தோப்பூர் மக்களது வாக்குகளை கடந்த காலத்தில் பெற்றுக் கொண்டவர்கள் இந்த மக்களுக்கு எதையும் செய்யாது இருந்துள்ளனர்.வெறும் வாக்குகளை வழங்கும் மக்களாகவே நீங்கள் இருந்துள்ளீர்கள்.இந்த நிலை மாற வேண்டும்.எமது தேவைகளை நாம்பெற்றுக் கொள்ள எமக்கான அரசியல் தலைமைத்துவங்கள் உருவாக்கப்பட வேண்டும்.தோப்பூருக்கு நேர்மையான அரசியல் தலைமைத்துவத்தை வழங்க ரஸ்ஸாக் தகுதியானவர் என்பதை எமது கட்சியும்,அதனது உயர் பீடமும் தீர்மாணித்தது.தோப்பூர் மக்கள் கையில் தங்க முட்டையிடும் வாத்தினை அடையாளப்படுத்தி தந்துள்ளோம்.அதிலிருந்து பலனை அனுபவிக்க வேண்டியது உங்களது பொறுப்பாகும்.
தோப்பூர் பிரதேசத்தில் உள்ள 11 கிராம சேவகர் பிரிவிலும் தனித்தனி தேவைகள் உண்டு.உங்களிடம் இருந்து வாக்குகளை பெற்றுச்  சென்றவர்கள் எந்த உரிமையினை பெற்றுத்தந்துள்ளார்கள்..குறைந்தது.ஒரு பிரதேச செயலகத்தின் உப அலுவலகத்தையேனும் பெற்றுத் தர முடிந்த்தா?.ஆனால் நாம் சொன்னதை செய்பவர்கள்,அந்த பிரதேச உப செயலகத்தை பெற்றுத் தந்துள்ளோம்.இன்னும் இந்த மகாகண சபையில் உங்களது குரலாக ஒலிக்க இருக்கும் எமது வேட்பாளர்களின் வெற்றிக்காக நீங்கள்  தியாகங்களை செய்ய வேண்டியுள்ளது.
இந்த நாட்டின் ஜனாதிபதி,மத்திய அரசு,உள்ளுராட்சிமன்றங்கள் எனபன எமது ஆட்சியில் உள்ளது.அப்படியெனில் மகாண ஆட்சியும் ஆளும் கட்சியின் வசம் வருகின்ற போது தான் எத்தனையோ அபிவிருத்திகளை கொண்டுவர முடியும்.அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்டு 3 வருடங்களில் 65 உள்ளுராட்சிமன்றப் பிரதி நிதிகளை பெற்றுள்ளது.வெற்றி பெறும் அணிகள் குறித்து நாம் அறிந்து வைத்துள்ளோம்.அதனால் தான் தைரியமாக வெற்றி பெறும் அணியின் வெற்றியினை உறுதிப்படுத்திவருகின்றோம்.
ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பின்னர் தமது மதிப்பை இழந்துவிட்டது.கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் ரணிலுடன் கூட்டு சேரந்து தேர்தலில் போட்டியிட்டார் அந்த கட்சி படுதோல்வியடைந்த்து,பின்னர் சரத் பொன்சேகாவுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டார் அவரும் தோல்வியடைந்தார்.தொடர்ந்த 22 தேர்தல்களில் தோற்றுப் போனவர்களுடன் கூட்டையேற்படுத்தி சமூகத்திற்கு சாதித்தவை எதுவும் இல்லை.
தற்போதைய சூழலில் அளும் கட்சியே கிழக்கில் ஆட்சியினை கைப்பற்றும் என்று நன்றாக தெரிந்து கொண்டும் ரவூப் ஹக்கீம் அவர்கள்,கிழக்கு மாகாண முஸ்லிம்கள், ஜனாதிபதிக்கும்,அரசுக்கும்எதிரானவர்கள் என்பதை காண்பித்து,இரு தரப்புக்கும் இடையில் பாரியதொரு இடைவெளியினை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்..இந்த காட்டிக் கொடுப்பு எமது சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.
இந்த நாட்டில்வாழும் 20 இலட்சம் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டிய பொருப்பு அரசியல்வாதிகளாகிய எங்களுக்கும் இருக்கின்றது.அதனை செய்வதற்கு இந்த தேர்தலில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிடுவதற்கான உடன்பாட்டினை எட்டும் பணியில் அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் என்பன அயராது முயற்சி செய்த போது,ரவூப் ஹக்கீம் அவர்கள் தாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடப்  போவதாக ஊடகங்களுக்கு அறிக்கைவிடுத்தார்,அப்போது ஜனாதிபதி அவர்கள் ரவூப் ஹக்கீமிடம் சொன்னார்.அவ்வாறு இணைந்து போட்டியிடுவது என்றால்,என்னை இந்த ஆட்சியில் அமர்த்துவதற்கு பாடுபட்டு உழைத்த இரு முஸ்லிம சகோதர அமைச்சர்களான றிசாத் பதியுதீன்,அதாவுல்லா ஆகியோரிருக்கின்றார்கள்,அவர்களுடன் பேசி தான் ஒரு முடிவுக்கு வர முடியும் என்று.நாங்கள் ரவூப் ஹக்கீம் அவர்களை அழைத்த போது வராமல்,எங்களை அழிப்பதற்காக ஜனாதிபதியுடன் சேர முற்பட்ட போது அதன் உண்மையினை ஜனாதிபதி புரிந்து கொண்டார்.
இவ்வாறான துர நோக்கற்ற குறுகிய அரசியல் லாபங்களுக்காக பணியாற்றும் கட்சிகளுக்கு பின்னால் போவோமெனில் என்ன நிலையேற்படும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

No comments:

Post a Comment