Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, September 5, 2012

பொறுப்பற்ற தலைமை தான் முஸ்லிம் காங்கிர


பள்ளிவாசல் பிரச்சினையினை உரிய தரப்பினருடன் பேசி தீர்த்துக் கொள்வதற்கு முடியாத வக்கற்ற தலைமைத்துவத்திற்கு பின்னால் செல்வதால் எமது மக்கள் எந்த நன்மையினையும் பெற முடியாது என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் புல்மோட்டையில் தெரிவித்தார்.


கிழக்கு மாகாண சபை  தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து தற்போது புல்மோட்டையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரைாயற்றிக் கொண்டிருக்கும் போது மேற்கண்டவாறு அவர் கூறினார்.
 பிரதேச சபை உறுப்பினர் எம்.பதுர்தீன் தலைமையில் இடம் பெறும் இக் கூட்டத்தில் முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ய யஹியான்,பிரதி தலைவர்.எம்.பைரூஸ்,நெடா அமைப்பின் பணிப்பாளர் அமீன் உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இதன் போது பிரசன்னமாகியிருக்கின்றனர்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் பேசும் போது –
1987 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட போது,அது தனது செயற்பாட்டை சமூகத்திற்காக செய்ய வேண்டும் என்ற ஆசையோடு தான் இருந்தது.தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவுக்கு பின்னர் தீர்மாணிக்கும் சக்தியினை அக்கட்சி இழந்து நிற்கின்றது.அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்,தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினையினை கொண்டுவந்த கிராமங்கள் தோறும் பேசுகின்றார்.அவர் ஒரு தலைமைத்துவத்ததை வைத்துக் கொண்டிருப்பவர் என்றால்,சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி,எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு செயல் இடம்பெறாமல் இருக்க வேண்டிய நடவடிக்கையினை எடுத்திருக்கலாம்.
அமைச்சரவையில் அமைதியாகவும்,கிழக்கில் வந்து மக்களை உசுப்பேத்தியும்,ஏனைய பகுதிகளுக்கு சென்று பெரும்பான்மை மக்களுடன் ஒன்றும் தெரியாதவர் போன்று மேடையேற்றும் நாடகங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
கட்சி என்பது மக்களின் தேவைகளை பெற்றுத் தரக் கூடியதொன்றாக இருக்க வேண்டும்.இன்று சில கட்சிகள்  எதையெல்லாம் செய்யக் சடாதோ,அதையெல்லாம் பட்ட வெளிச்சமாக செய்து கொண்டு,முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையினரின் எதிரிகள் என்ற அடையாளத்தை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றது.
இந்த சதிகளுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தெரிவித்தார்.

No comments:

Post a Comment