எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை அற்ற
நிலையில் முடிவுற்ற தேர்தலைத் தொடர்ந்து கிழக்கு மாகாணசபை தொடர்பில் நேற்று (10) காலை ஜனாதிபதி தலைமையில்
இடம்பெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து இரவு அது தொடர்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தமது கருத்தினை தெரிவித்துள்ளார்.
நேற்றைய கூட்டத்தில் முழுதாக ஆட்சி அமைப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தே
பேசப்பட்டதாகவும், போனஸ் ஆசனங்கள் குறித்தோ ஆட்சி அமைக்கும் பட்சத்தில் யார் முதல்வர் என்பது
குறித்தோ பேசப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.
அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வெளிநாடு சென்றிருப்பதால் அவர் வருகை தந்தவுடன் மாகாண சபைக்கான தேசியப்பட்டியல் தொடர்பான
முடிவுகள் எட்டப்படும் என்று பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைப்பதன் சாத்தியக்கூறுகளைப் பற்றி
வினவியபோது அது தொடர்பில் முடிவேதும் இல்லை எனினும் சாதகாமான சமிக்ஞையாக நேற்று
இடம்பெற்ற பாராளுமன்ற தெரிவுக் குழுக் கூட்டம் ஒன்றில் மு. கா. தலைவர்
நீதியமைச்சர் ரவூப் ஹகீம், தாங்கள் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும், தேர்தலில் தனித்துப்
போட்டியிடுவது பற்றி ஜனாதிபதிக்கு அறிவித்துவிட்டே போட்டியிட்டதாகவும்
குறிப்பிட்டதை மேற்கோள் காட்டினார்.
முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்
காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக்
கேட்ட போது. அதை அரசு அவதானித்து வருவதாகவும், அவ்வாறான நிலை ஏற்படின்
எதிர்க்கட்சியாக இருந்து செயற்படவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தயாராக
இருப்பதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment