ஜனாதிபதி வழக்குரைஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு 500 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிபதி வழங்கிய கட்டளையை இரத்துச் செய்யுமாறு அசோஷியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி இன்று சாட்சியமளித்தார்.
சிலுமின பத்திரிகையில், வெளிவந்த மானபங்கத்துக்கு காரணமான கட்டுரை தொடர்பான மானநஷ்ட ஈடு கோரக்கை வழக்கில் எதிர்த்தரப்பு இன்றிய நிலையில் நீதிபதி வழங்கிய வழங்கிய தீர்ப்பை இரத்துச்செய்யுமாறு கோரி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மானநஷ்டஈடு கோரும் வழக்கில் சாட்சிமளிப்பதற்காக 2010 ஒக்டோபர் 20, ஆம் திகதி, மாவட்ட நீதிமன்றத்திற்கு தான் வந்ததாக நீதிமன்றில் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி கூறினார்.
எனினும், தான் நீதிமன்றத்தின் சிற்றுண்டிச்சாலையில் இருந்தபோது மனுதாரரின் வழக்குரைஞர் ஒரு பிரேரணையை தாக்கல் செய்துள்ளார் எனவும் இதனால் இந்த வழக்கு ஒத்திவைக்கப்படும் எனவும் பிரதிவாதியின் வழக்குரைஞர் கூறியதால் தான் நீதிமன்றத்தைவிட்டு வெளியேறி, மற்றொரு அலுவலுக்காக சட்டமா அதிபர் அலுவலகத்திற்குச் சென்றதாகவும் அவர் கூறினார்.
'நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதுகுறித்து சபாநாயகர் தீர்மானிப்பார். அதுபோல நீதிமன்றில் ஒரு பிரேரணையை விசாரணைக்கு எடுப்பது, குறித்து நீதிபதிதான் தீர்மானிப்பார் என நான் அறிவேன்' என குறுக்கு விசாரணையின்போது சபாநாயகர் தெரிவித்தார். இந்த வழக்கு 3 ஆம் இலக்க நீதமன்றுக்கு மாற்றப்பட்டதை தான் அறிந்திருந்தார் எனவும் ஆயினும் 2010 ஒக்டோபர் 20 ஆம் திகதி தான் நீதிமன்றில் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வழக்கின் இரு தரப்பினரும் எழுத்துமூலமான வாதங்களை ஒக்டோபர் 8 ஆம் திகதி எழுத்துமூலம் சமர்ப்பிக்க வேண்டுமென நீதிமன்றம் கட்டளையிட்டது.

No comments:
Post a Comment