ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸிள் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 12 ஆண்டு நினைவு தினத்தையொட்டி
இன்று கொழும்பு இஹ்ஷானிய்யா அரபுக் கல்லுாரியில்
வி்சேட கத்தமுல் குர்ஆன் தமாமும், துஆ பிரர்த்தனையும் இடம் பெற்றது.
மர்ஹூம் கலாநிதி
நியாஸ் மௌலவி பவுண்டேஷன் தலைவர் மௌலவி அல்ஹாஜ் உமைர் நியாஸ் தலைமையில் இடம் பெற்ற இந்த
நிகழ்வின் துஆ பிரார்த்தனையினை மௌலவி பரூஜ் (இஹ்ஸானி) நடத்தினார்.
இந்த நிகழ்வில்
கைத்தொழில் வணிகத் துறை அமைச்சரின இணைப்ப செயலாளர் அல்ஹாஜ் றியாஸ் பதியுதீன் உட்பட
பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கை அரசியலில்
முஸ்லிம் சமூகத்திற்க முகவரியினை பெற்றுக் கொடுத்ததுடன்,முஸ்லிம்களின் பேரம் பேசும்
சக்தியினை வெளிக்காட்டிய ஒரு அரசியல் தலைவராக மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் திகழ்ந்ததாகவும்,அன்று
இடம் பெற்ற விமான விபத்தில் மர்ஹூம் அஸ்ரப் சஹீதானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் சுவன
வாழ்வுக்கு அனைவரும் பிரார்த்திக்குமாறு இன்றைய நிகழ்வி்ல் கலந்து கொண்ட இணைப்பு செயலாளர்
றியாஜ் பதியுதீன் அங்கு கருத்துரைக்கும் போது குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment