Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, September 17, 2012

கிழக்கின் முதலமைச்சர் விவகாரம்-எழுதுவது அபூ அஸ்ஜத்


                        
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிவடைந்தும்,மழை பெய்து துாவானம் விடாத நிலைக்கு இன்று கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.கயிறு இழுத்தல் என்ற பதத்தை கடந்து காட்டிக் கொடுத்தல் என்ற நியைிலேயே சிறுபான்மை அரசியல் கட்சிகள் மாறியுள்ளது.


குறிப்பாக கிழக்கில் தேர்தல் அறிவிக்கப்பட்டது  தொடக்கம் இன்று வரை மேடைகளில் ஒலித்த கருத்துக்களை மீண்டும் அதனை தெரிவித்தவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தால் அதனை நான் கூறினேனா என்ற அளவுக்கு அரசியல் மறதிகள் மாறிவிட்டன.அதற்கு நாம் அரசியல்வாதிகளை குற்றம் காண்பது ஒரு விதத்தில் பிழையென்று தான் கூறவேண்டும்.அதற்காக அவர்கள் அனைவரும் செய்வது சரியென்றும் கூறிவிடமுடியாது.

தற்போது முதலமைச்சர் பங்கீடு வலுப்பெற்றுள்ள நிலையில்,ஆட்சியில் அமரப் போகின்றவர்களை விடவும் அதிகமாக குழம்பி போயிருப்பத ஊடகவியலாளர்கள் என்பது தான் உண்மையாகும்,நிமிடத்திற்கு நிமிடம் ஒ்னறுக் கொன்று முரண்பட்ட கருத்துக்களும்,நம்பகத் தகுந்த தகவல்களும் அவர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டு தான் இருக்கின்றது.
கிழக்கு முதலமைச்சராக அன்று இருந்த பிள்ளையானை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்பதில் சிலர் அதீத பிரயத்ததனம் செய்துவருவதாக தெரிவிக்கப்பட்ட  போதிலும்,பி்ள்ளையான் இனிமேல் அப்பதவிக்கு தகுதியில்லை,என்பதை பிரதி அமைச்சர் முரளீதரன்(கருனா)பகிரங்கமாக அறிவித்து விட்டார்.கடந்த மாகாணசபை தேர்தலில் பி்ள்ளையானை முதலமைச்சராக ஆக்கி அழகுப் பார்க்க வேண்டும் என தமது முழுப்பலத்தையும் பயன்படுத்திய கருணா அம்மான்,இந்த தேர்தலில் பிள்ளையான்  வேண்டும்,அதற்கு மாறாக கருணாவின் சகோதரி வெற்றி பெற்று மதலமைச்சராக வரவேண்டும் என்பதி்லும்,முஸ்லிம்களின் வாக்குகள் இன்றி தமிழர்கள் வாக்களித்து்  தமிழ் முதலமைச்சர் ஒருவர் வரவேண்டும் என்பதற்காக பகிரங்மாக இனவாத கருத்துக்களை கூறியதனால் தமது வேட்பாளரின் தோல்விக்கு கருணாவே காரணமாகிவிட்டார்.இந்த தோல்வி என்பது மாகாண சபைக்கு மட்டுமல்ல அடுத்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இதனது தாக்கம் எதிரொலிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் கருணா உள்ளார்.
அதே வேளை கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பொது தேர்தலில் சில வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்ட முன்னால் அமைச்சர் அமீர் அலி இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது,அடுத்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பில் மீண்டும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது பாராளுமன்ற நிதித்துவத்தை  பெற்றுக் கொள்வதற்கான அடித்தளத்தை இட்டுள்ளது என்பதை அரசியல் தெரிந்த எவரும் கணக்குப் போட்டு பார்த்துக் கொள்வார்கள்.
அதே போல் அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் தமது உறுப்பினர்கனை பெற்றுள்ளதை குறைத்து மதிப்பிட முடியாது,இன்றைய மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்துவதில் அமைச்சர் றிசாத்,அமைச்சர் அதாவுல்லா ஆகியோர் ஆற்றியுள்ள பங்களிப்பு என்பது இலகவானது அல்ல.இது பெரும் தியாகங்களுக்கு மத்தியில் இடம்  பெற்ற ஒரு வரலாற்று பதிவாகும்.அன்று அமைச்சர் அதாவுல்லா கிழக்கும்-வடக்கும் பிரிந்து இருக்க வேண்டும் என்பதற்காக வழங்கிய ஆதரவை இன்றும் ஜனாதிபதி நன்றியுடன் நினைவு கூர்ந்துவருகின்றார்.
அதே போன்று அரசாங்கத்துக்கு எதிராக இலங்கையில் உள்ள சில அமைப்புக்கள் ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் சமர்ப்பித்த அறிக்கையினை உண்மைத் தன்மையினை தெளிவுப்படுத்தி சர்வதேசம் எங்கும் பறந்து சென்றும்,முஸ்லிம் நாடுகளின் துாதுவர்களை சந்தித்து புல்லுறுவிகளின் நிகழ்ச்சி நிரல் குறித்து விளக்கப்படுத்தி,முஸ்லிம் நாடுகளின் அதிகப்படியான ஆதரவை பெற்றுக் கொடுத்த அமைச்சர் றிசாத் பதியுதீன் சேவைக்கு நன்றி செலுத்த வேண்டிய தார்மீக பொறுப்பும் மஹிந்த அரசாங்கத்துக்கு உண்டு என்பதும் யாவரும் அறிந்த விடயமே.எந்த ஒரு தீர்மாணத்தையும் சிறு பான்மை சமூகங்கள் சார்பில் எடுக்கும் போது இவ்விரு தலைவர்களின் அனுமதியின்றி ஜனாதிபதி எடுக்கமாட்டார் என்பது தெளிவான உண்மை.இதனை தனது அமைச்சரவையின் பல்வேறு சந்தரப்பங்களில் கூறியுள்ளமையினை நினைவுபடுத்த வேண்டியது பொருத்தமாகும்.
குறிப்பாக கிழக்கு முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் இருப்பதில் அரசாங்கத்திற்கு எவ்வித சஞ்சலமும் இல்லை என்பதை தற்போது பேசப்படும் முதலமைச்சர் நியமனத்திலிருந்து காணமுடிகின்றது.அரசு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்த போதும்,ஏனைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளை சேர்த்து ஆட்சி அமைப்பதை தான் ஜனாதிபதிவிரும்புகின்றார்.அதற்காகத் தான் முதலமைச்சர் நியமனம் தொடர்பில் இழுபறி நிலை காணப்படுகின்றது.
ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக தாங்கள் இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறிவரும் நிலையில்,கிழக்கில் தேசிய அரசாங்கம் ஒன்று அமைவதற்கு தாங்கள் தமது ஆதரைவை நல்க விரும்பவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.அதே போல் தேசிய அரசாங்கம் அமைய ஜக்கிய தேசிய கட்சி நான்கு நிபந்தனைகளை முன் வைத்துள்ளது.இந்த நிலையில் அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் சேரக் கூடாது என்று கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கு குறித்து அரியாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் இருக்கின்றதா? என்ற கேள்வி மக்கள் எழுந்துள்ளது.தமது கட்சி பேசப்படும் ஒரு பொருளாக இருக்க வேண்டும் என்பதில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் விருப்பம் கொண்டவர் என்பதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை என்பது உண்மைதான்.
தற்போதைய முதலமைச்சர் விடயத்தில் ஏற்படுத்தப்படும் தாமதம் முஸ்லிம் சமூகத்தின் இயலாத்தன்மையினை வெளிக்காட்டிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட ஆரம்பித்துள்ளது.மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் மறைந்து இன்றுடன் 12 வருடங்கள் கழிந்துள்ள நிலையில்,அவர் அன்று கூறிய சில வார்த்தைகைளை இன்றைய தலைமை மீளப்பார்பது தான் அவருக்கு செய்யும் நன்றிகடனாகும்.புலிகளின் தலைவர் அழிக்கப்படும் போது,அதனை என்னால் காண முடியும் என்றால்,அதனைவிட சந்தோஷம் எதுவுமி்ல்லை,அதே போல் ரணில் விக்ரமசிங்க என்ற சாரதி ஜக்கிய தேசிய கட்சியில் இருக்கும்  என்ற இரு வாசகங்களும் காலத்தின் தீர்மானத்திற்கு முக்கியமானதாகும்……..
நாளைய விடியலில் கிழக்கின் முஸ்லிம் முதலமைச்சர்………..யார்?

No comments:

Post a Comment