Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Friday, July 13, 2012

வடமாகாண முஸ்லிம் மத ஸ்தாபன பிரதி நிதிகளுக்கான செயலமர்வு



வடமாகாணத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸாக்களின் பரிபாலன சபையினருக்கான முழு நாள் செயலமர்வு நாளை சனிக்கிழமை காலை 8 மணி முதல் மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயத்தில் இடம் பெறவுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தெரிவித்தார்.


கடந்த 22 வருட காலமாக வடமாகாணத்தில் உள்ள மத ஸ்தாபனங்கள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்துடன் தொடர்பற்று காணப்படுவதாகவும்,அவற்றை தொடர்பு படுத்தி செயற்திறமை மிக்க ஸ்தாபனமாக இயங்கச் செய்வது இந்த கூட்டத்தின் நோக்கமாகும்.

வக்பு சபை ,முஸ்லிம் கலாசார திணைக்கள பிரதி நிதிகள்,உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் .பல தலைப்புக்களில் உலமாக்களின் உரைகள்,மற்றும் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோரது  உரைகள் இடம் பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீனும் கலந்து கொள்ளவுள்ளார்.

No comments:

Post a Comment