Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Friday, July 13, 2012

மன்னார் அல்-அஸ்ஹர் நவோதய பாடசாலையில் பல நிகழ்வுகள்




மன்னார் அல் –அஸ்ஹர் நவோதய பாடசாலையில் இன்று பல்வேறு நிகழச்சிகள் இடம் பெற்றது.வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில் வணிகத்துறை அமைச்சருமான் றிசாத் பதியுதீன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,சட்டத்தரணியுமான ஹூனைஸ் பாருக்,ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.பாடசாலை அதிபர்.எம்.யூனுஸ் மாஹிர் தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.


இந்த பாடசாலையில் 15 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நுலக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதுடன்,ஜந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய ஏ.கே.எம்.அசாத்,எம்.எம்.மின்ஹாஸ்,ஏ.றிபாஸ் அஹமத்,ஏ.அல்ஹாம்,ஏ.ஏ.குவைதா,மருத்துவ பீடத்துக்கு தெரிவான எச்எம்..றிஸ்மியா, ஆர்.மிஸ்ராஸ்,ஏ.எம்.இல்யாஸ்,முகாமைத்துவம் மாவட்ட முதன் நிலை தெரிவான எஸ்.எம்.சஜாத்,எம்.ஏ.எம்.நிஸ்வர்,கலைத்துறையில் (சுப்பர் மெரீட்) பெற்ற அஸ்ரி,மற்றும் விளையாட்டு துறையில் திறமை காட்டியவர்களும் இன்று கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் மன்னார் வலயக் கல்வி பணிப்பளார் எம்.எம்.சியான்,சென்சேவியர் ஆண்கள் பாடசாலை அதிபர்.அருட் சகோதர்ர் ஜே.ஒகஸ்ட்டின்,மன்னார் பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் என்.பரீத்,மன்னார் பிரதேச செயலாளர் ஸ்டேன்லி டிமெல்,பொறியியலாளர் மின்சார சபை மன்னார் மிஸ்ராக ,சவூதி நாட்டு தனவந்தர் உட்பட பலரும் கந்து கொண்டனர்.
பாடசாலை அதிபர் யூனுஸ் மாஹிர் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவ்வித்தமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment