Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Friday, June 29, 2012

புத்தளம் மாவட்டத்தில் அரசாங்கத்தின் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் வெற்றிகரமாக இடம் பெறுகின்றது-திருமதி சந்தநாயக்க தெரிவிப்பு


அரசாங்கத்தின் கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டம் என்ற செயற் திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டத்திலுள்ள 16 பிரதேச செயலகப் பிரிவுகளில் 548 வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட திட்டமிடல் பிரிவு பணிப்பாளர் திருமதி .எஸ்.பீ.சந்தநாயக்க தெரிவித்தார்.


2012 ஆம் ஆண்டு நடை முறைப்படுத்தப்பட்டுள்ள பிரதான  திட்டங்களில் கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டம் முக்கியமானதாகும்.அதே வேளை தற்போதைய திட்ட அறிக்கையின் படி இதற்கென 548 மில்லியன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,அதில் 217 திட்டங்கள்  நிறைவுற்றுள்ளதாகவும்,ஏனைய திட்டங்களில் பெரும்பாலானவை இம்மாதம் முடிவடைவதற்குள் பூர்த்தியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வாரு கிராமத்திற்கும் இத்திட்டத்தின் கீழ் தலா 10 இலட்சம் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன்,பாதை,மின்சாரம்,குடிநீர் திட்டங்கள் என்பன இத்திட்டத்தின் மூலம் நிறைவு செய்யப்பட்டுள்ளனை.
புத்தளம் மாவட் செயலளார் கிங்ஸ்லி பெர்ணான்டோவின் தலைமையில் பிரதேச செயலாளர்களின் பங்களிப்புடன்.இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் திட்ட பணிப்பாளர் திருமதி.சந்தநாயக்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment