வடமேல்,மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இவ்வருடம்
நிறைவுக்குள் கைத்தறி நெசவு தொழிற்சாலைகளை நிறுவ தமது அமைச்சு
நடவடிக்கையெடுத்துள்ளதாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்
தெரிவித்துள்ளார்.
கைத்தறி நெசவுத் துறை சார்ந்த செயலணியின் கூட்டம்
அமைச்சில் வியாழக்கிழமை இடம் பெற்ற போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அமைச்சர் தகவல் தருகையில் கூறியதாவது –
இலங்கையின் கைத்தறி
நெசவுத் துறையின் மேம்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு
மாவட்டத்திலும் ஒவ்வொரு கைத்தறி நெசவு நிலையங்களை அமைக்க
திட்டமிடப்பட்டுள்ளது.அதில் மூன்று முதற் கட்டமாக மூன்று மாவட்டத்தில்
ஆரம்பிக்கவுள்ளதுடன்,அடுத்த ஆண்டில் ஏனைய மாவட்டங்களில் இதனை ஆரம்பிக்க திட்டம்
வகுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த நிலையம்
குறித்து மாகாண சபைகளுடன் கலந்துரையாடப்படவுள்ளதுடன்,தற்போது மாகாண சபைகளின் மூலம்
முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தினை வலுப்படுத்தும் வகையில் தமது அமைச்சு
உதவிகளை வழங்கும் வகையிலேயே இது
நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
திவிநெகும வேலைத் திட்டத்தின் இலக்கினை அடையும் வகையில்
இவ்வருடம் நாடு தழுவிய ரீதியில் 500
கைத்தறி நெசவாளர்களை உருவாக்குவது இதனது பிரதான நோக்கமாகும் என்றும்
அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.அதனடிப்படையில் மூன்று மாகாணங்களிலும் அடுத்த
மாதம் பயிற்சியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன்,பயிற்சி காலத்தில்
அவர்களுக்கான கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது.
6 மாத கால பயிற்சியினை நிறைவு செய்து கொண்டவர்களுக்கு
இத்துறையில் தொழில் புரிவதற்கான உபகரணங்கள இலவசமாக வழங்குவதுடன்,அவர்களது தயாரிப்புக்களுக்கு
சிறந்த சந்தை வாய்ப்பினையும் ஏற்படுத்தி கொடுப்பது குறித்தும் கவனம்
செலுத்தப்பட்டுவருவதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
அமைச்சின் மேலதிக செயலளார்களான எம்.தாஜூதீன்,
ஏ.எம்.ஜயசிங்க உட்பட மாகாண பணிப்பாளர்கள்,ஏற்றுமதி அதிகார சபை அதிகாரிகள் உட்பட
பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவ்வண்ணம்

ஊடக இணைப்பளார்
;
No comments:
Post a Comment