
இவ்வாசிரிய உதவியாளர்கள் கோப்பாய் ஆசிரிய பயிற்ச்சி கலாசாலையில் தமது இறுதி மாத கால பயிற்சிகளை செய்ய வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்த விடயம் குறித்து,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணிப்புரைக்கமைய கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள்,மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சு வார்த்தையின் பின்னர் சில முடிவுகள் மேற் கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
இதனடிப்படையில் 2010 ஆண்டு தொடக்கம் புத்தளம் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள தொலைக்கல்வி மத்திய நிலையத்தில் தமது பயிற்சிகளை மேற்கொண்டு வந்த 300 க்கும் மேற்பட்ட ஆசிரிய உதவியளார்கள் கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலைக்கு சென்று இதே பயிற்சியினை 3 மாதகாலம் மேற்கொள்வதில் பல்வேறுபட்ட பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியேற்படும் என சுட்டிக்கட்டப்பட்டதையடுத்து இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.
அதே வேளை புத்தளத்தில் வார இறுதி உதவி ஆசிரிய பயிற்சிகளை மேற்கொண்டவர்கள் இம்மாதம் 21 ஆம் திகதி தமது பதிவுகளை புத்தளம் பாத்திமா மகளிர் கல்லாரியிலும்,அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் பாடசாலையில் பயிற்சிகளை மேற்கொண்டுவந்தவர்கள் இம்மாதம் 23 ஆம்
திகதி கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலையின் மன்னார் கிளையில் தமது பதிவுகளை செய்வதுடன்,இவ்விரு மாவட்டங்களில் பயிற்சி பெறும் உதவி ஆசிரியர்கள் 301 பேருடன்,கோப்பாயில் இறுதி 3 மாத கால பயிற்சியை செய்பவர்கள் இம்மாதம் 16 ஆம் திகதிக்கும் 20 ஆம் திக்குமிடையில் தமது பதிவுகளை கோப்பயா ஆசிரிய பயிற்சி கலாசாலையிலும் செய்து கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் மேலும் கூறினார்.
பாடசாலைகளின் அதிபர்களால் முன் வைக்கப்பட்ட கோறிக்கைகளை கவனத்திற் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வும்,உதவி ஆசிரியர்களில் 80 சதவீதமானவர்கள் பெண்கள் என்பைதையும் உள்வாங்கி இத்தீர்மாணம் எடுக்கப்பட்டதாக கூறிய அவர்,கல்வி அமைச்சர் மற்றும் மாகாண ஆளுநர்,கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் மற்றும் புத்தளம் பாத்திமா மகளிர் கல்லுரி அதிபர் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கு தமது தமது கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதீயுதீன் மற்றும் தனது நன்றிகளையும் தெரிவிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தெரிவித்தார்
No comments:
Post a Comment