புத்தளம் நகர எல்லக்குட்பட்ட மணல் குன்று கிராமத்தில் ஞாயிற்றுக் கிழமை இரவு மர்ம மனிதர் குறித்த சர்ச்சையையடுத்து பொலீஸ்-பிரதேச பொது மக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்ப நிலையினால் பொலீஸார் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும்,மேலும் 5 பொதுமக்கள் பொலீஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் காயமான நிலையில் அதில் 4 பேர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிலாபம் வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் தள வைத்தியசாலை அதிகாரியொருவா தெரிவித்தார்.இந்த நிலையினையடுத்து ஆத்திரமடைந்த பொது மக்கள் புத்தளம் நகர சுற்றுவட்டத்தில் ஒன்று கூடி தமது எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த பொலீஸாரே தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமானதாக பொலீஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து புத்தளம் நகர பிரதான சுற்றுவலயத்தில் பொலீசாருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் இனம் தெரியாதோரால் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன்,டயர்களும் வீதியில் போட்டு எரியுட்டப்பட்டதால் போக்குவரத்து தடங்கள்கள் சில மணிநேரம் காணப்பட்டது.
இதனையடுத்து இங்கு வந்த பொதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து கூடியிரந்த பொது மக்களை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை செய்தனர்.
நிலைமயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் புத்தளம் பெரிய பள்ளிவாசல்,ஜமிய்யத்துல் உலமா சபை,புத்தளம் நகர பிதா பாயிஸ்,முன்னால் அமைச்சர் நவ்வி உட்பட பலரும் நடவடிக்கைகளை மேற் கொண்டனர்.
No comments:
Post a Comment