
மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 30 விவசாய அமைப்புக்களுக்கான இரு சில்லு உழவு இயந்திரங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மடு பிரதேச செயலக முன்றலில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் பேசும் போது -
நாம் மனிதர்கள் ,உணர்வுகளை மதிக்கத் தெரிந்தவாகள்,மத்த்தால் வேறுபட்டாலும்,மனித பண்புகளை கொண்டவாகள்.ஆதலால் ஒருவர் மற்றையவாகளை மதித்து,புரிந்து வாழ வேண்டும்.
இன்று எமக்குள் புதிய உணர்வுகள் மீண்டும் மலர ஆரம்பித்துள்ளது.ஏனெனில் 1990 ஆம் ஆண்டு நாம் அவ்வாறு தான் வாழ்ந்திருக்கின்றோம்.எதுவும் எமக்கு நிரந்தரமானதல்ல,மனிதர்களுக்கு நலவை பெற்றுக் கொடுக்கும் பணிகளை எவா செய்தாலும் அதற்கு றந் கூலியுண்டு.
இன்று வடக்கில் மக்கள் மீள்குடியுற ஆரம்பித்துள்ளனர்.அவாகளது தேவைகளை நாம் பெற்றுக் கொடுக்க பல நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றோம்.இந்த செயற்பாடுகளில் மிகவும் முக்கியமானதாக விவசாயத்துறையினை மேம்படுத்துவதன் பால் எமது கவனம் திரும்பியுள்ளது.அதற்காக பல உதவிகளை பெற்றுள்ளோம்.இன்று இந்த உழவு இயந்திரங்களை சேவா லங்கா நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளோம்.கிடைக்காத ஏனைய விவசாய சங்கங்களுக்கு இன்னும் சில வாரங்களில் அவற்றை பெற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.இதே போன்று கடற்றொழிலினையும் மேம்படுத்தவுள்ளோம். என்றும் அமைச்சர் கூறினார்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் -
இடம் பொந்து மீண்டும் மீள்குடியேறிய மக்கள் அனைவரும் சம்மாக அனுக வேண்டும் என்பது தான் எமது வேண்டுகோள்,அனைவரும் யுத்த்த்தால் பாதிக்கப்பட்டவாகள்.இந்த நாட்டு ஜனாதிபதி உதவி புரியும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்திய விடயம் தான் இடம் பெயாந்த மக்களுக்கு பணிசெய்யும் போது எவ்வித காழ் புணர்ச்சிகளுடனும் செயற்படாமல் எல்ஏலாரையும் சம்மாக சென்றடைய பணியாற்றுமாறு.அதனை நாம் எமது மாவட்டத்தில் முன்மாதிரியாக நடை முறைப்படுத்துகின்றோம்.
இது தான் எமக்கு இன்றைய தேவையாகும் என கூறினார்.
No comments:
Post a Comment