இலங்கை வங்கி கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஷரீஆ அமைவான வங்கியான அந்நுார் வங்கிச் சேவை குறித்து மாணவா்கள் மற்றும் பல் துறை சார்ந்தவா்களை அறிவூட்டும் வேலைத்திட்டம் இன்று புத்தளத்திலும் இடம் பெறுகின்றது.
புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரி மாணவா்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவூட்டப்பட்டனா்.பாடசாலை அதிபா் எஸ்.எம்.அன்வா் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் இலங்கை வங்கியின் இஸ்லாமிய வங்கியலுக்கான முகாமையாளா் சட்டமுதுமானி சட்டத்தரணி எஸ்.எம்.எம்.அப்துல்லா,புத்தளம் கிளை வங்கியின் நிறைவேற்று அதிகாரியும்,இஸ்லாமிய வங்கியலின் மாவட்ட இணைப்பாளருமான ஜ.எம்.நவாஸ்,புத்தளம் நகர சபை உறுப்பினா் எஸ்.ஆர்.எம்.முஹ்ஸியும்,பாடசாலை பிரதி அதிபா்களான மௌலவி யஹ்கூப்,சபியுத்தீன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனா்.
1988 ஆண்டின் 30 ஆம் இலக்க திருத்தத்தின் அனுகூலத்தை பயன்படுத்தி அலங்கை வங்கி இஸ்லாமிய வங்கியினை அறிமுகப்படுத்தியுள்ளது.ஷரீ நிபுணா்களைக் கொண்ட அவதானிப்புக் குழுவினால் கண்காணிக்கப்பட்டு தனித்துவமான திறைசேரி தொழிற்பாட்டுடன் கூடிய சேவைகளை அந்நுார் (ஒளி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வங்கியின் முகாமையாளா் சட்டத்தரணி எஸ்.எம்.அப்துல்லா தெரிவித்தார்.
பெரியார்களுக்கான சேமிப்பு கணக்கு மற்றும் சிறியார்களுக்கான சேமிப்பு கணக்கு என்பன 2010.01.01 திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,இலங்கையில் 306 கிளைகளிலும் இஸ்லாமிய வங்கி சேவை இடம் பெறுகின்றது.
முழுமையாக வட்டியற்ற வங்கியாக இது செயற்படுவதுடன்,பல நலன் திட்டங்களும் இதில் காணப்படுவதாகவும் முகாமையாளா் மேலும் கூறினார்
இதே வேளை புத்தளம் பாத்திமா மகளிர் கல்லுாரி,மணல் குண்று அல்-அஷ்ராக் வித்தியாலயம்,மற்றும் மொஹிதீன் ஜூம்ஆ பள்ளிவாசல்களிலும் அறிவூட்டும் பணிகள் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment