இலங்கையில் தற்போது 21 சதவீதமானவா்கள் போஷாக்கின்மைக்குள்ளாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.2013 ஆம் ஆண்டளவில் அதனை 12 சதவீதமாக குறைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஆனால் நாம் 2013 ஆம் ஆகும் போது இதனை இலங்கையில் போஷாக்கின்மையை அகற்றிவிடுவோம் என்று கடற்றொழில்,நீரியள் வளத்துறை அமைச்சர் டொக்டா் ராஜித சேனாரத்ன இன்று புத்தளத்தில் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்ட கடற்றொழிலாளா்களின் மாவட்ட சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யும் நிகழ்வு இபுனு பதுாதா மண்டபத்தில் இடம் பெற்றது.
தற்போது ஒரு நாளைக்கு போஷாக்கின்மைக்கு உள்ளாகியுள்ள ஒருவர் 31 கிறேம் மீனை உற்கொள்கின்றார்.அதனை 60 கிறேமாக இரட்டிப்பாக்க வேண்டியுள்ளது.அதற்கான திட்டங்களை எமது அமைச்சு வகுத்துள்ளது.நாட்டில் பிடிக்கப்படும் மீன்கள் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது .இதன் மூலம் 21 ஆயிரம் பில்லியன் ரூபா வருமானமாக கிடைக்கின்றது.2013 ல் இது 50 ஆயிரம் பில்லியனாக அதிகரிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.இதற்கென கரையோர மீன் பிடித்திட்டம்,ஆழ்கடல் மீன் பிடித் திட்டங்கள் நவீன முறைக்குள் உள்ளீர்க்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.தற்போது மீனவா்கள் பாவிக்கும் பழைய என்ஜின்களுக்கு பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய மீனவ படகுகள் பெற்றுக் கொடுக்கப்டவுள்ளது.இவற்றை கொள்வனவு செய்ய கடன் வசதிகள் வழகங்கப்படவுள்ளது.
கடல் நீரை குளிர்த்தன்மை கொண்டவையாக மீனவா்கள் தங்களை மீன்களை ஆழ்கடலில் இருந்து கரைக்கு கொண்டுவரும் வரைக்குமான வசதிகளை கொண்ட குளிரூட்டிகள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.கடன் திட்டத்திற்கான வட்டி வீதத்தில் 4 சதத்தை அரசாங்கமும்,8 சத வீதத்தை மீனவா்களும் செலுத்தும் வகையில் இலகுபடுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம்.
நாம் எமது மீனவா்களின் பாதுகாப்பு குறித்து செயற்படுகின்ற போது,அவா்களும் அதற்கான ஒததுழைப்புக்களை வழங்க வேண்டும்.நவீன செட்லைட் கருவிகள் மூலம் மீனவா்களின் கடல் செயற்பாடுகளை கண்கானிக்கவுள்ளோம்.இதன் மூலம் மீனவா்கள் கடலில் ஏதேனும் பிரச்சினைகளுக்குள்ளானால்,அவா்களை மிகவும் இலகுவாக காப்பாற்ற முடியும்.
தற்போது மீனவரின் குடும்பத்துக்கு ஓய்வுதியமாக 7500 ரூபா வழங்கப்படுகின்றது.அதனை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கையெடுக்கப்படும்.60 வயதை பூா்த்தி செய்த ஒருவா் இதனை பெற உரித்துடையவராவார்.
அத்தோடு மட்டும் நின்றுவிடாமல் மினவ கிராமங்கள் உருவாக்கப்படவிருக்கின்றது.
அக்கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்,மினல சமூகத்தின் கல்வி மேம்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தவுள்ளோம்.பேருவளை கடற்கரைப்பகுதியினை மீனவ இறங்குதுறையொன்றை நிர்மாணிக்கவுள்ளோம்.அதன் மூலம் மீனவா்கள் பெரும் நன்மையடைவா்,அங்கு சிறிய கப்பல்கள் திருத்தும் தளம் ஒன்றும் உருவாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.இன்னும் சில தினங்களில் சவூதி நாட்டு மன்னர இலங்கை்கு வரவுள்ளார் அவா்களுடன் நாம் கைச்சாத்திடவுள்ளளோம்.3000 டொலர் மில்லியன்களை அவா்கள் எமக்கு வழங்கவுள்ளார்கள்.
குறிப்பாக மாலைதீவு மற்றும் இந்திய போன்ற நாடுகளில் இலங்கை மீனவா்கள் மிகவும் குறைந்த அளவில் தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனா்.அவா்களில் பெரும் எண்ணிக்கையிலானவா்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினா் விக்டர் என்தனி,வடமேல் மாகா ண அமைச்சர் சனத் நிசான்த மற்றும் முன்னால் அமைச்சரும்,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸ் மற்றும் மாகாண சபை உறுப்பினா் சின்தக அமல் மாயதுன்ன,என்.ரீ.தாஹிர் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.
No comments:
Post a Comment