Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, October 28, 2010

புத்தளம் சென் அன்றுாஸ் மத்திய மஹா வித்தியாலயத்தின் 125 ஆம் ஆண்டு நிறைவின் இரண்டாவது நாள் நிகழ்வும்,பரிசளிப்பும் இன்று இடம் பெற்றது

புத்தளம் சென் அன்றுாஸ் மத்திய  மஹா வித்தியாலயத்தின் 125 ஆம் ஆண்டு நிறைவின் இரண்டாவது நாள் நிகழ்வும்,பரிசளிப்பும் இன்று இடம் பெற்றது.பாடசாலை மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான மேடையில் இந்த நிகழ்வுகள் இடம் பெற்றன.காலை 8 மணியளவில் புத்தளம் தபாலக சுற்றுவட்டத்தில் இருந்து பௌத்த மற்றும் கத்தோலிக்க மதங்களின்  தலைவா்கள்,பாடசாலை மாணவிகளின் பேன்ட் வாத்தியத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனா்.




பின்னர் நிகழ்ச்சிகள் காலை 9 மணிக்கு ஆரம்பமானது.மாணவா்கள் நிகழ்வின் பிரதம அதிதி வடமேல் மாகாண முதலமைச்சர் சட்டத்தரணி அத்துலவிஜயசிங்கவின் வரவுக்காக காலை 9.30 முதல் தயாராக இருந்த போதும் 11 மணிவரை அவா் அங்கு சமூகமளிக்கவில்லை.11 .30 வரை பொறுத்திருந்த நிர்வாகம் அங்கு சமூகமளித்திருந்த வடமேல் மாகாண சபை உறுப்பினா் சின்தக அமல் மாயாதுன்னவை முதலமைச்சரின் சார்பில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு வேண்டுகோள்விடுத்தனா்.அதற்கமைவாக மாகாண சபை உறுப்பினா் மற்றுமு் புத்தளம்  பிரதேச சபை பிரதித்த தலைவா் நிமல் பமுனு ஆராய்ச்சி ஆகியோர் முதலமைச்சரினால் திறக்கப்படவிருந்த இரு பெயா்பலகைகளை திறை நீக்கம் செய்தனா்.

125 வருட பூர்த்தியினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.இதில் மன்னாள் மாகாண அமைச்சர் எம்.எச்.எம்.நவவியும் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment