
புத்தளம் தள வைத்தியசாலையில் ஒரே சூழில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவமொன்று தெரியவந்துள்ளது.
புத்தளம் தில்லையடி பிரதேசத்தை சேர்ந்த தாயொருத்திக்கேய இப்பிரசவம் இடம் பெற்றுள்ளது.இந்த குழந்தைகளின் பராமறிப்புக்காக சிறுவர் அபிவிருத்தி மகளிர் அமைச்சு மாதாந்தம் 3000 ரூபாவை உதவித் தொகையாக வழங்கிவருகின்றது.புத்தளம் தில்லையடி பிரதேச சமுர்த்தி அதிகாரி ஏ.ஓ.எம்.றிபாய் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இந்த நிதி உதவி கிடைக்கப் பெற்றுள்ளது.அதன் முதல் உதவி தொகை புத்தளம் பிரதேச செயலாளர் ஏ.சீ.எம்.நபீலினால் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment