சில தினங்களுக்கு முன்னர் புத்தளம் பகுதியில் பெய்த மழையினையடுத்து மீண்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புத்தளம் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்று செவ்வாய்க்கிழமை மாலை வரை இந்த எண்ணிக்கை 9 ஆக காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவி்க்கின்றனர்.புத்தளம் 4 ஆம் வட்டாரத்தில் நுர் பள்ளி பகுதியில் ஏழு டெங்கு நோயாளர்களும்,அநுராதபுரம் வீதியில் 2 நோயளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதனையடுத்து நோயாளர்கள் வசிக்கும் வீடு மற்றும் சுற்றுப் புறங்கள் என்பனவற்றுக்கு எண்ணை தெளிக்கும் பணிகள் இன்று இடம் பெற்றதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே வேளை கவனிப்பாரற்று கைவிடப்பட்ட நிலையில் நுளம்பு பெருகும் இடங்களை கொண்ட காணிகளை உடைய உரிமையாளர்கள் நான்கு பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment