
கல்பிட்டி பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (2010.10.12) வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ ஆர் பலல்ல தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து அவர் தெரிவிக்கையிலேயே இந்த தகவலை வெளியிட்டார்.
கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனைத்து கிராம அதிகாரி பிரிவுகளிலும்,தற்போது டெங்கு குறித்த அறிவுறுத்தல்களும் சிரமதானப் பணிகளும் இடம் பெறுகின்றது.சுகாதார திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் டெங்கு குறித்த அறிவூட்டல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றது.
கடந்த ஜூன் மாதத்தில் டெங்கு நோயார்கள் சிலர் இருந்த போதும் அந்த நிலை தற்போது குறைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் மேலும் கூறினார்.
இதே வேளை இடம் பெயர்ந்த மக்கள் வாழும் முகாம்களிலும் டெங்கு ஒழிப்பு குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் றியால்தீன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment