புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் நம்பிக்கையாளர்களில் ஒருவரும்,ஓய்வு பெற்ற கிராம அதிகாரியுமான சமீரகமவைச் சேர்ந்த பட்டானி ராசிக் என்பவர் கடந்த 2010.02.11 ஆம் திகதி பொலனறுவை பள்ளிவாசல் முன்பாக வைத்து கடத்தப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரியை கைது செய்யுமாறு கோறி அவர்களது உறவினர்கள் மிகவும் உருக்கமான வேண்டுகொளை சம்பந்தப்பட்டவர்களுக்கு விடுத்துவருகின்றனர்.
இவர் கடத்தப்பட்டது குறித்து புத்தளம்,முந்தல்,பொலனறுவை பொலீஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதியப்பட்ட போதும்,ராசிக் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லையென்று அவர்களது உறவினர்கள் அக்கறைக்கு தெரிவித்தனர்.
பட்டானி ராசிக் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து பல்வேறு கதைகள் கூறப்பட்ட போதும்,அவரது கடத்தலின் பின்புலம் என்னவென்று சரியாக தெரியவில்லை,இருப்பினும் கடத்தல்காரர்(கள்) பெரும் தொகையான பணம் கோறி மிரட்டல்கள் விடுத்துள்ளது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பட்டானி ராசிக் சமூகத்தில் எல்லா தரப்பினராலும் மதிக்கப்பட்டுவந்தவர்,
புத்தளம் பிரதேச செயலக தலைமை அலுவலக கிராம அதிகாரியாக பணியாற்றியதுடன், இன உறவுகளை ஏற்படுத்துவதில் மிகவும் நெருக்கத்துடன் செயற்பட்டுவந்தவர்.
இவரது கடத்தலுடன் தொடர்புபட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையிலும்,அவர் கைது செய்யப்படாதது குறித்து குடும்பத்தினர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பட்டானி ராசிக் எவ்வித ஆபத்துகளுமின்றி மீட்கப்பட வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டிய தேவை தற்போது புத்தளம் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில் பட்டானி றாசிக்கை கடத்தியவர்கள் தலைமைறைவகியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில்,அவரை விடுதலை செய்யுமாறு புத்தளம் நகர மக்கள் சம்பந்தப்பட்ட கடத்தல் காரர்களிடத்தில் வேண்டுகோள்விடுக்கின்றது.
பட்டானி றாசிக் அவர்களை மீட்பது குறித்து புத்தளத்தில் நடைபெற்ற பொதுமக்களின் கூட்டத்தின் போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment