Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, October 14, 2010

பசும் பால் பாவனை அதிகரிப்பதன் மூலம் ஆரோக்கியமான மனித வாழ்வு கிட்டும்-பிரதி சபாநாயகர்

பால் மா பக்கட்டுகளை கொள்வனவு செய்வதை விட பசும்பாலை பயன்படுத்துவது பல வழிகளிலும் உடல்,உளத்தின் செயற்பாடுகளுக்கு சிறந்ததென தெரிவித்துள்ள பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரத்ன,.....வாசிக்கவும்
புத்தளம் கொட்டுக்கச்சி பண்ணையினை அரசு அபிவிருத்தி செய்யாவிட்டால் தனியாருக்கு கொடுத்து அதில் கால்நடைகள் மற்றும் பால் உற்பத்திகளை உக்குவிக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

புத்தளம் வண்ணாத்தவில்லு பகுதியில் மிருக வைத்திய அதிகாரிகளுக்கான புதிய அலுவலகத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (2010.10.14) மாலை இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த அலுவலகம் 70 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படுகின்றது.இதற்கான நிதியின் 40 இலட்சம் ரூபாவை வடமேல் மாகாண கால்நடை அமைச்சும்,30 இலட்சம் ரூபாவை வேல்ட் விஷன் நிறுவனமும் வழங்கவுள்ளதுஇஇரண்டு கட்டமாக இப்பணிகள் இடம் பெறவுள்ளது.

அங்கு மேலும் பிரதி சபாநாயகர் பேசும் போது -

நான் அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்தேன்.அங்கு எந்த கடைக்கு சென்றாலும் பசும் பால் ஒரு கிளாஸ் கிடைக்கும்.ஆனால் எமது பிரதேசங்களில் அந்த நிலை இல்லை.எமது பிரதேசத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்வில் வண்ணாத்தவில்லு பிரதேச சபை தலைவர் அசனா மரைக்கார்,பிரதேச சபை உறுப்பினர் சுல்தான் மரைக்கார் உட்பட வடமேல் மாகாண பணிப்பாளர் திருமதி சாமா ஹேரத்தும் கலந்து கொணடார்.

No comments:

Post a Comment