Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, October 23, 2010

இளைஞா்,யுவதிகளுக்கு தொழில்,மற்றும் கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு

புத்தளம் மாவட்டத்தில் க.பொ.த  சாதாரண தரைம் மற்றும் உயா் தரம் கற்கைகளை முடித்துக் கொண்ட  இளைஞா் யுவதிகளுக்கான  கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு புத்தளம் இபுனு பதுாதா மண்டபத்தில் இன்று இடம் பெற்றது.


புத்தளம் பிரதேச  செயலகத்தின் அனுசரணையில் மெகா கெரியர்  2010 என்னும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கருத்தரங்கை சீபீஎஸ் அமைப்பு ஒழுங்குபடுத்தியிருந்தது.



நேர்முகப் பரீட்சைக்கு தோற்றும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்,விண்ணப்பங்கள் செய்தல்,மற்றும் பட்டப்படிப்பு,மற்றும் துறைசார்ந்த தொழில் தெரிவு குறித்து இங்கு விளக்கமளிக்கப்பட்டன.
புத்தளம்,கல்பிட்டி,முந்தல்,வண்ணாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலானவா்கள் இதில் கலந்து கொண்டதாக சீபீஎஸ் அமைப்பின் பணிப்பாளா் எஸ்.இல்ஹாம் தெரிவித்தார்.









No comments:

Post a Comment