Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, October 9, 2010

30 வருடங்களின் பின்னர் யாழில் இஸ்லாமிய கலை விழா

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முஸ்லிம் மஸ்லிஸ் நடத்திய இஸ்லாமிய கலை விழா கலாசாலையின் ரதி லக்ஷ்மி மண்டபத்தில் நேற்று மாலை இடம் பெற்றது.
கலாசாலை அதிபர்  வே.கா.கணபதிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஆசிரிய மாணவி சுஜானா எழுதிய  செதுக்கப்படாத சிற்பங்கள் என்னும் கவிதை தொகுப்பும் அமைச்சரினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.முதல் பிரதியினை நுலாசிரியையின் தாயார் பெற்றுக் கொண்டார்.

மாணவ ஆசிரியர்களின் வில்லுப்பாட்டு,நடனம்,பாடல்.பேச்சு,நாடகம் என்பன இடம் பெற்றது.அதிதிகளும்,கலாசாலை அதிபா மற்றும் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.










No comments:

Post a Comment