புத்தளம்
மாவட்ட சிறுபான்மை சமூகம் இழந்துள்ள பாராளுமன்றப் பிரதி நிதித்துவத்தை பெற்றுக் கொள்வதற்காக
தராசு சின்னத்தில் கூட்டணியாக நாங்கள் போட்டியிடுவதாக தெரிவித்துள்ள தராசு சின்ன வேட்பாளர் தொழிலதிபர் அலி சப்ரி றஹீம்
கடந்த காலங்களில் எமது மக்கள் பெரும்பான்மை கட்சிகளின் பெரும்பான்மை வேட்பாளர்களுக்கு
வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியதற்கு பதிலாக இன்று எம்மை அவர்கள் தாக்குகின்றார்கள்
என்றும் கூறினார்.
பொதுத்தேர்தலில்
புத்தளம் மாவட்டத்தில் தராசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் அலி சப்ரி றஹீமினை
ஆதரித்து புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை
இரவு இடம் பெற்ற இளைஞர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு
கூறினார்.
மேலும்
தமதுரையின் போது தெரிவிக்கையில்
கடந்த
33 வருடங்கள் புத்தளம் தொகுதி சிறுபான்மை மக்கள் தமக்கான் ஒரு பாராளுமன்றப் பிரதி நிதித்துவமின்மையால்
பெரும்பான்மை அரசியல்வாதிகளிடத்தில் கையேந்தும்
நிலையே காணப்பட்டுவந்தது, 1இலட்சத்து 50 ஆயிரம் சிறுபான்மை வாக்குகளை வைத்துக்கொண்டு
நாம் இநத பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெறாமைக்கு கடிாரணமாக நாங்களே இருக்கின்றேன்.
வென்னப்புவ
முதல் ஆனமடுவ வரையில் கேட்டுகும் வாக்காளர்களுக்கு எமது விருப்பு வாக்குகளை அளித்து அந்த வெற்றியினை கொடுக்கின்றோம்.ஆனால்
அவர்கள் வெற்றி பெற்றதன் பின்னர் எம்மை பார்ப்பதுமில்லை.இதனை
மாற்ற தேவையான சரியான சந்தர்ப்பம் இம்முறை எமக்கு கிட்டியுள்ளது.பாராளுமன்றம் என்பது பேச்சு போட்டி நடத்தி அதற்கு புள்ளி வழங்கும் இடமல்ல
.மாறாக அது மக்களின் குறைகளை முன் வைத்து அதற்கு
தீர்வினை பெறும் இடம் என்பதுடன்,சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக எழுதப்படும் அடிமை
சாசனங்களை தட்டிக் கேட்டு ,அதனை திருப்பி எழுத வைக்கும் மையம் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.இன்று ஆளுமையினை
பற்றி சிலர் பேசுகின்றனர்.
ஆளுமை
என்பது சாதித்து காட்டுவதாகும்,அதனை நாம் தனிப்பட்ட
முறையிலும்,எமது கட்சியின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் ஊடகவும் சாதித்துக் காட்டியுள்ளோம்.இம்முறை
நாம் எமது தலைமையானது புத்தளத்திற்கான வென்றெடுக்கும் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்துக்காக
பல தியாங்கங்களையும்,விட்டுக் கொடுப்புக்களையும் செய்துள்ளது.
நாம்
வெற்றி பெற்றால் யாருடன் சேருவீர்கள் என கேட்கின்றனர்.எமது முக்கிய குறிக்கோள் அதுவல்ல ,
முதலாவது குறிக்கோள் சிறுபான்மை முஸ்லிம்
பாராளுமன்ற பிரதி நிதிகளின் எண்ணிக்கையினை அதிகரிக்க செய்து இந்த சமூகத்தின் பாதுகாப்பினை
உறுதிப்படுத்துவது என்பது தான்,அபிவிருத்திகளும்,தொழில் வாய்ப்புக்கள் அடுத்தபடியான
விடயம் என்றும் அலி சப்ரி றஹீம் இதன் போது கூறினார்.
இந்த
மாநாட்டில் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் இணைப்பு செயலாளர் தேசமான்ய இர்ஷாத்
றஹ்மத்துல்லா,முன்னாள் நகர சபை உறுப்பினர் யூசுப் நிஸ்தார்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
புத்தளம் தொகுதி இளைஞர் அமைப்பாளர் மிராஜ் பைருன்,சமூக சேவையாளர் எம்.எச்.முஹம்மத்,டாக்டர்
இல்ஹாம் மரைக்கார் உட்பட பலரும் உரையாறற்றினர்.
No comments:
Post a Comment